பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 芝夏3

யாரையும் எழுப்பாமல் தானே போய்ப் பால் வாங்கி வந்து அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்தார் சிவகாமி நாதன். பகங்கிளித்தேவர் தம்பதிகள்-முத்துராமலிங்கத் தின் இரகசியத் திருமணம் பற்றி அறிந்தால் என்ன சொல்லுவார்களோ என்ற தயக்கம் சிவகாமிநாதனுக்கு ஏற்பட்டது. முத்துராமலிங்கம் எழுந்திருக்கட்டும் என்று காத்திருந்தார் அவர். . ... •

31

சிவகாமிநாதன் எவ்வளவோ உபசாரமாகவும் வற்புறுத்திக் கூறியும் கேட்காமல் பசுங்கிளித் தேவரும், அவர் மனைவியும் ஓர் ஒரமாகத் தரையிலேயே குத்த வைத்து உட்கார்ந்த்ார்கள். பசுங்கிளித் தேவரை மட்டும் கையைப் பிடித்து இழுத்து வந்து எப்படியோ கட்டாயப் படுத்திப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து விட்டார் சிவகாமிநாதன். ஆனால் திருமதி தேவர் மட்டும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் கூசினாற்போலத் தரையிலேயே ஒதுங்கி உட்கார்ந்து விட்டாள். தேவர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் தரையில் உட்கார்ந் திருப்பதைவிட அதிகக் கூச்சமும் ஒடுக்கமுமாகத்தான் உட்கார்ந்திருந்தார். இன்னும் நவீன மேஜை நாற்காலிக் கலாசாரத்துக்குப் பலியாகிவிடாத அசல் இந்திய கிராம வாசிகளை அப்போது தம்மெதிரே பார்த்தார் சிவகாமி நாதன். அவர்களை அவர் இரசித்துப் பழகினார்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வை எனக்கு ரொம்ப வேண்டியவன்' என்று நாட்டுப்புறத்து மனிதர் களுக்கே உரிய பெரிய உத்தியோகஸ்தர்களை eraard தெரியும் என்கிற பாணியில் பேச்சைத் தொடங்கினார். தேவர். அதில் மிகவும் வறண்டு போன நாட்டுப்புறத்துக் கர்வம்தான் தொனித்தது. உளுத்துப்போன இந்திய அதிகார வர்க்கமும் பதவிக்கு வருகிறவர்களுக்கு சலாம்

நி-14 - -