பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 நிசப்த சங்கீதம்

போட்டுப் போட்டே கை தளர்ந்து போன உத்தியோக சாதியும் இன்னும் கிராமவாசிகளிடமும். நாட்டுப்புறத்து மக்களிடமும் கொஞ்சம் மரியாதைக்குரியனவாகவே இருப் பதைப் பற்றி யோசித்தார் சிவகாமிநாதன்.

"கூட்டம், பேச்சு, அடிதடி, கலவரம்னு சீரழியவா அவனைப் பட்டணத்துக்கு அனுப்பினேன்? ஒரு நல்ல வேலையாகப் பார்த்துக்கிட்டு எனக்கு நாலு காசு அனுப்புவானின்னு பார்த்தேன். அவன் என்னடான்னா...!"

பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே முத்துராம லிங்கத்தின் தந்தையைச் சரியாகப் புரிந்தது சிவகாமிநாத - னுக்கு. - -

என்னமோ கூட்டத்திலே பேசி அதுலே கல்லடி பட்டு மண்டையிலே கட்டுப் போட்டுக்கிட்டுக் கெடக்கான்னு அந்தப் பொம்பளை வந்து சொல்லிச்சே ஐயா?" -

'எந்தப் பொம்பளை?' - - 'அதான் கலையரசி கண்மணின்னு எங்க பக்கத்துப் பொம்பளை ஒண்னு அரசியல்லே அலையிதுங்களே?'

அப்பிடியா?" என்று அந்தப் பேச்சை வளர்க்காமல் விட்டார் சிவகாமிநாதன். கிராமாந்தரத்துப் பெற்றோர் களுக்கும், நகரங்களில் பட்டப் படிப்பை முடித்துவிட்டுத் திரும்பும் இளைஞர்களுக்கும் நடுவேதான் சிந்தனையிலும் செயல்களிலும தலைமுறை இடைவெளியே உருவாகிறது என்று அவருக்குத் தோன்றியது.

- முத்துராமலிங்கம் எழுந்திருந்து வந்தான். அவனையும் அவன் பெற்றோரையும் முன் அறையில் தனியே விட்டு விட்டுச் சிவகாமிநாதன் அச்சகப் பகுதிக்குச் சென்றார்.

முதல் சில விநாடிகள் பரஸ்பர rேமலாப விசாரணை

யில் கழிந்தன. - r

"இதுக் காகவா பணத்தை வீணாச் செலவழிச்சிக்கிட்டு ரெண்டுபேரும் இங்கே பொறப்பட்டு வந்தீங்க? இங்கே