நா. பார்த்தசாரதி 2 : 5
என்ன மனுஷாளே இல்லாத காட்டிலியா இருக்கேன்? கூட
இருக்கறவங்க கவனிச்சுக்க மாட்டாங்களா?" -
"அதில்லேடா, கண்மணி வந்து சொன்னதைக் கேட்டப் பெறவு உனக்கு ஆளுக்கே ஆபத்தோன்னு பயமா
பிரிச்சு!" - 'அதுமாதிரி இருந்தா நானே தாக்கல் எழுதியிருப் பேனே?' - X
சரி குருசாமி சேர்வையை மறுவாட்டி பார்த்தியா, பாக்கவியா?" • .
"அவருக்கு நீங்க - யாருன்னே ஞாபகம் இல்லே!. அப்புறம் என்னை எங்கே கவனிக்கப் போறாரு...?"
'இப்போ நானும் உங்க ஆத்தாளும் அவரைப் பார்க்கப் போறோம். நீயும் எங்ககூடப் பொறப்பிடு. இன்னிக்கே அவருகிட்டச் சொல்வி உனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்துடறேன்." . -
'தான் வரலே ஐயா! நீங்களும் ஆத்தாவும் மட்டும் போயிட்டு வாங்க." . - - .
"ஏண்டா வரமாட்டியா..?" " . . . . . . "அவர் எதுவும் செய்வார்னு எனக்குத் தோணலை."
சரி நாங்க போக வழியாச்சும் சொல்லி அனுப்பு. பேர்லிஸ் அதிகாரி குருசாமி சேர்வையைத் தேடிக் கொண்டு தன் பெற்றோர் போவதற்கு வழி விவரம் சொல்வி ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி வாடகையையும் கொடுத்தான் முத்துராமலிங்கம். -
'இதெல்லாம் எதுக்குப்பா? பக்கத்திலே இருந்தா நாங்க நடந்தே போய்க்குவோம்' என்று மறுத்துப் பார்த் தார் அவன் தந்தை. . . . . ... . . . . . . * × - "நீங்களா அலைஞ்சு விசாரிச்சு எடம் கண்டுபிடிக் கிறது. கஷ்டம். ரிக்ஷான்னா அவங்களே கொண்டுபோய்