உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நிசப்த சங்கீதம்

விட்டுடுவாங்க' என்று சொல்விச் சமாதானப்படுத்தி அவர் களை அனுப்பி வைத்தான் முத்துராமலிங்கம்.

நல்லாருக்கியா முத்துராமுt' என்று அவன் தாய். தான் மிகவும் கனிவாக அவனை அருகே வந்து விசாரித் தாள். புது இடம் என்கிற சங்கோஜம் தடுக்க அந்நியர் முன்னிலையில்கூட விட்டுக் கொடுக்க முடியாத பாசம் உந்த அருகே வந்து அவன் தலையைத் தொட்டுப் பார்த்து மயிர்க்கற்றைகளிடையே தடவி, "எங்கேடா காயம்? ரொம்ப வலுவாப் பட்டிரிச்சோ?' என ஆதரவாகவும் ஆறுதலாகவும் கேட்டாள் அன்னை. - -

"அதெல்லாம் ஒண்னுமில்லே ஆத்தா' என்று. அவளிடமிருந்து தலையை மெதுவாக விடுவித்துக் கொண் டான் முத்துராமலிங்கம். - * .

தன்னை வந்து பார்த்துவிட்டுப் போன கலையரசி கண் மணி ஊருக்குத் திரும்பிப் போய்த் தந்தையிடம் உள்ளதும் இல்லாததுமாகத் திரித்துவிட்டிருப்பாள் எனத் தோன் றியது. சிவகாமிநாதன் தான் முத்துராமலிங்கத்தை உருப் பட்ாமல் அடிக்கிறார் என்பது போலவும் அவள் தந்தை. யிடம் சொல்லியிருப்பாள் என்று பட்டது. - .

போலீஸ் சர்க்கிள் குருசாமி சேர்வையைப் பார்ப்பதற். காக ரிக்ஷா ஏறியபோது, "ஏம்பா, காலையிலே நான் வர்ரப்பு இருந்தாரே அத்தப் பெரியவருதான் உங்க. தியாகியா?" என்று அவனை விசாரித்தார் தந்தை.

ஆமாம் ஐயா என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்த முத்துராமலிங்கத்தை மேலும் விடாமல் கண்டிக் கிற தொனியில், "பொழைப்பைத் தேடிக்கிட்டுத்தான் மெட்ராஸ் வந்தியா? இல்லே தியாகிங்களையும் தொண்ட ருங்களையும் தேடிக்கிட்டு இங்கே வந்தியா? புரியாமத். தான் கேட்கிறேன். சொல்லு' என்றார். அவனுக்கு அவர் அப்படிக் கேட்ட்து பிடிக்கவில்லை என்றாலும் அப். போது தந்தையோடு வாதிட்டுக் கொண்டிராமல், "நீங்க. - போயிட்டு வாங்க... அப்புறம் பேசிக்கலாம்' என்று கூறி.