பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 217

அவரை அனுப்பி வைத்தான். அவர்களை அனுப்பிவிட்டு அவன் வீட்டுக்குள் வந்ததுமே சிவகாமிநாதன் அவனை எதிர்கொண்டார். அவரே இதமாக அவனிடம் சொன் னார். . . . .

"நாம் எவ்வளவோ மறைச்சிவச்சிருந்தும் போலீஸுக்கு விஷயம் தெரியும். எப்ப ரிஜிஸ்தர் பண்ணினோமோ அப்பவே அது பகிரங்கமும் ஆகிவிடுகிறது. உங்கப்பா சர்க்கிள் இன்ஸ்பெக்டரைப் பார்த்தால் இந்தக் கலியான விஷயத்தை எப்படியும் தெரிஞ்சுக்கப் போறாரு! நாமதான் சொல்லாம மறைச் சோம்னு இருப்பானேன்? அவர் திரும்பி வந்ததும் உள்ளதைச் சொல்வி நீயும், மங்காவுமாக அவரை யும் உங்கம்மாவையும் கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கிறது தான் முறை. ஆயிரம் இருந்தாலும் அவங்க உன்னைப் பெத்தவங்க,'

எங்கப்பா கோபக்காரரு. இதைக் கேட்டா ஆகா சத்துக்கும் பூமிக்குமாக் குதிப்பாரு! வீணா உங்க வீட்டுக் குள்ளாரச் சண்டையும் சத்தமும் வேணும்னுதான் பார்த் தேன் ஐயா?"

"சண்டையோ சத்தமோ எது வந்தாலும் பரவா யில்லை! நடந்ததை நடந்தபடியே அவங்ககிட்டச் சொல் விடறதுதான் நல்லது.' - - . . .

"அவர் மனசை யாரோ போய்ச் சொல்லிக் கலைச்சு இங்கே அனுப்பிவச்சிருக்காங்க. என்னைப் பத்தியும் உங்களைப் பத்தியும்கூடத் தப்பாச் சொல்வியிருப்பாங்க போலிருக்கு. நான் உங்க பேச்சைக் கேட்டுத்தான் வேலை தேடிக்காம இருக்கேன்கிற மாதிரிப் பேசினாரு. மறுபடியும் உங்க முன்னாடியே அப்படிப் பேசினாருன்னா என் மனசு பொறுக்காது உண்மையிலே உங்களை நான் என்னோட ஞானத் தந்தையா நெனைச்சுக்கிட்டிருக்கேன்.'

"இருக்கலாம்ப்பா! ஆனால் பெற்ற தந்தைக்கு எந்த உரிமையும் இல்லேன்னு சொல்லிட முடியாதே? என்று