20 நிசப்த சங்கீதம்
வற்றையும் நினைத்தான் முத்துராமலிங்கம். ஒருமுறை அவளை எதிரே வைத்துக்கொண்டே ஒர் அரசியல் நண்பன்.
உடல், பொருள். ஆவி அனைத்தையும் கட்சிக்காக ஈந்த வர்னு சொல்லுவாங்களே, அது இவங்களுக்குத்தான் பொருந்தும் ஒரு சின்னத் திருத்தம். ஆவி'யை மட்டும் இவங்க இன்னும் வழங்கலே! உடல், பொருள் முதலிய மத்ததை எல்லாம் அவ்வப்போது கட்சிக்கும், கட்சித் தலை வருங்களுக்கும் தாராளமா வழங்கியிருக்காங்க...!" என்று.
அறிமுகப்படுத்தியபோது அதற்காக ஆத்திரப்படவோ,
அறவோ, கொதிக்கவோ, துள்ளிக் குதிக்கவோ செய்யாமல் சிரித்தபடி நின்றாள் இந்தக் கண்மணி. அந்த அறிமுக வார்த்தைகளில் இருந்த எதுவும் அவளுடைய மான உணர்வைக் கிளறச் செய்து ஆத்திரமூட்டவில்லை என்பது முத்துராமலிங்கத்துக்கு ஆச்சரியத்தை அளித்தது. மான உணர்வு முனை மழுங்கிப் போனவர்கள் அல்லது அறவே. இல்லாதவர்கள்தான் இன்று பொது வாழ்வில் லாபகரமாக வாழ்கிறார்கள். அல்லது வாழ முடிகிறது என்றே பல வேளைகளில் அல்னுக்குத் தோன்றியது. சிறுமை கண்டு பொங்குகிற-தவறுகளுக்குக் கூசுகிற, பொய்யைக் கண்டு இறுகிற எவனையும், எந்தக் கட்சியும், எந்தத் தலைவரும். தன் அருகே நெருங்கவிடுவதில்லை என்பதை அவன் கவனித் திருந்தான். எதற்கும் ஒத்துப்போகிற-எதிலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிற, எதையும் சுலபமாக ஜீரணித்துக் கொள்கிற ஆட்களைத்தான் கட்சித் தலைமைகளும் தலைவர்களும் தங்களை அண்டி வளர அநுமதிக்கிறார்கள் என்றும் பச்சையாகப் புரிந்தது. .
கலையரசி குமாரி கண்மணியும் அப்படித்தான் வளர்ந்: திருந்தாள்: வளர்க்கப்பட்டிருந்தாள் எதிர்க்கட்சிகளை யும், எதிர்க்கட்சித் தலைவர்களையும், விமர்சித்தும் க்ண்டித்தும், நாடகம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு சிறிய குழுவின் தலைவியான அவள் கட்சி மேலிடத்துக்கும், முக்கியப் பொறுப்பில் உள்ள தலைவர் களுக்கும் உடல் பொருள் அனைத்தையும் வழங்கி