உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I & - நிசப்த சங்கீதம்

சிரித்துக்கொண்டே அவனைப் பதிலுக்கு வினவினார். சிவகாமிநாதன்! அவன் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான். எதிர்த்துப் பதில் எதுவும் சொல்லவில்லை. சண்முகம் வேறு அப்போது கூட இல்லை. முந்திய இரவு தான் கோடம்பாக்கம் போயிருந்தார். அவர் இருந்தால் இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் உதவியாக இருக்கும். அவரை விட்டே தன் தந்தையிடம் பேசச் செய்யலாம். அவரும் நிதானமாக எடுத்துச் சொல்லுவார். இப்போது அதற்கு வழி இல்லை. சிவகாமிநாதன்தான் இவ்வளவுக்கும் காரணம் என்று தந்தையே அவர் மீது காரணம் புரியாத கோபத்தோடு இருப்பதனால் அவரை விட்டுப் பேசுவது சரியில்லை என்று தோன்றியது. சிவகாமி. நாதனும் அதற்கு மனம் இணங்கவில்லை. .

"உங்கப்பா வந்ததும், சர்க்கிள் இன்ஸ்பெக்டரைத் தனக்குத் தெரியும்கிற பாணியில் பேச ஆரம்பிச்சதே. எனக்குப் பிடிக்கலேப்பா...நான் அவரிட்ட உனக்காகப் பரிஞ்சுப் பேசறது நல்லா இருக்காது. நீயே பேசிக்கிறது. தான் சரீன்னு படுது' என்றார் அவர்.

பணத்தையும், உத்தியோகத்தையுமே பெரிசா மதிக்கிற நாட்டுப்புற மனப்போக்கு அவருக்கு.

"அது தப்பு இல்லேப்பா!' முக்காவாசி ஜனங்க அப் பிடித்தான் இருக்காங்க. இருப்பாங்க... ஆனா அந்த ரெண் டையும் தவிர எதுவுமே வேண்டாம்னு நெனைக்கிற மனப் பான்மைதான் கெடுதல். அப்படி மனப்பான்மையாலே தான் பணம் இல்லாத யோக்கியனைக் கேவலப்படுத்த, றாங்க. பதவி இருந்தா மோசமானவனையும் மதிக்கிறாங்க. பதவி இல்லாட்டா முதல்தரமான மனிதனைக்கூட உதா சீனப்படுத்தறாங்க.' -

"பிரிட்டிஷ் ஆட்சியின் பழக்க தோஷத்தாலே ஏற்பட்டு விட்ட நிரந்தர நோக்காடு இது பணத்துக்கும், அதிகாரத்

துக்குமே மரியாதை தரப் பழக்கப்படுத்தியதே அந்த ஆட்சி -

தான். அது சுதந்திர இந்தியாவிலேயும் தொடருது. ஜன: