2 24 நிசப்த சங்கீதம்
முடியாமல், ஏற்கவும் முடியாமல்குமுறிக் கொண்டிருந்தார், அவருடைய ஆத்திரமெல்லாம் சிவகாமிநாதன் மேலும் முத்துராமலிங்கத்தின் மேலும்தான். எங்காவது வகை யாகச் சிக்கினால் ஆள் ஏற்பாடு பண்ணி முத்துராமலிங் கத்தின் கையைக் காலை முறித்து விடக்கூட அவர் தயாராயிருந்தார். வகித்துக்கொண்டிருந்த மந்திரி பதவி மட்டும்.தடுத்திராவிட்டால் நேரடியாகவே வன்முறைகளில் இறங்கியிருப்பார் அவர்.
ஊராருக்கெல்லாம் பெண்ணுரிமையைப் பற்றியும் பெண் விடுதலையைப் பற்றியும் வாய் கிழியப் பேசிய இவருடைய மகளுக்கு மட்டும் விரும்பிய கணவனை அடைய உரிமை இல்லையா? என்பதாக யாரும் கேட்டு விடக் கூடாதே என்ற பயம்தான் இப்போது மந்திரியைத் தடுத்தது. ஆனால் அதற்காக அவர் முழுமையாக வாசா இருந்து விடவும் இல்லை. தன் பெயரோடும், தன்னோடும் நேரடியாகத் தொடர்பு படுத்திவிட முடியாத மறைமுக மான கெடுதல்களைச் சிவகாமிநாதனுக்கும், முத்துராம விங்கத்துக்கும் செய்து கொண்டுதான் இருந்தார்.
அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை மவுண்ட்ரோடு
எல். எல். ஏ. பில்டிங் மாடி ஹாலில் ஒரு கவியரங்கம் நடை பெற்றது. கவியரங்கத்தின் தலைப்பு எங்கள் இந்தியா' என்பது. தேசபக்தியும், முற்போக்கு எண்ணமும் கொண்ட .பல கவிஞர்கள் பாடினார்கள். முத்துராமலிங்கமும்
பாடினான். -
எங்கள் இந்தியா ஆம்! இது எங்கள் இந்தியா! மியூவியங்களும் மிருகக் காட்சி சாலைகளும் மிகுந்த இந்தியா!
சீர்த்திருத்தவாதிகள் சிலரும் • . . .
செப்பிடு வித்தைக்காரர் பலரும் செறிந்த இந்தியா! . . . . . . . . . . .
தியாகிகள் சிலரும் திருடர்கள் பலரும் நிறைந்த இந்தியா
- *