உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2擅

முன்னுக்கு வந்திருந்ததின் வரலாறும், நடைமுறையும் அவன் அநுமானத்தில் நன்கு பிடிபட்டிருந்தன. ஓர் ஊரில் கண்மணியின் கலை நிகழ்ச்சிக்கு அறுநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கிடைத்தது. மாதம் முப்பது நாளும் அவள் ஏதாவது வெளியூரில் நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டு தான் இருந்தான். வருமானமும் புகழும் வந்து கொண் டிருந்தன. :

அவளுடைய சொந்தக் கிராமம் தேனிக்கு அருகில்தான் இருந்தது. எனவேதான் அவளும் மற்ற கட்சித் தோழர் களைப்போல் தன்பகுதியிலிருந்து லாரியில் சென்னைக்குப் புறப்பட்டிருந்தாள். - .

அந்த லாரியில் இருந்த கும்பலில் கண்மணி தான் பேசு வதற்கும். பழகுவதற்கும் உரிய ஆளாகத் தேர்ந்தெடுத்தது. முத்துராமலிங்கத்தைத்தான். அதில் அவனுக்கு மட்டும் லாரியில் உட்கார இடம் கிடைத்தது. - -

சிறிதும் அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிமயமான அந்தக் கூட்டத்தில் தண்ணிரில் மிதக்கும் எண்ணெய்போல் ஒட்டா மலும் ஒட்ட முடியாமலும் தவித்தான் அவன்.

உங்கிட்ட இருக்கிற கொஞ்சத் தொகையில் வெளியில் எங்கேயும் தங்கக் கட்டுப்படி ஆவாது. குருசாமி சேர்வை வீட்டிலேயே ஒண்டிக்கிடப் பாரு. என் லெட்டரைக் குடுத்துப் பேசினா அவரு எதாச்சும் ஒரு வழி பண்ணுவா குன்னு நெனைக்கிறேன். லாரிகள் புறப்படப் போகிற சமயம் அறிந்து அவனுடைய தந்தை மறுபடி அவனுக்கு நினைவூட்டி விடைகொடுத்தார்.

"பீச்லே அண்ணா சமாதிக்குப் பக்கமா உள்ரோட்டிலே போய் லாரிங்க நிக்கணும். எல்லா லாரிக்கும் அங்கேதான் இடம் ஒதுக்கியிருக்காங்க...வழியிலே போலிஸ் தொந்தரவு' எதுவும் இருக்காது......கட்சிக் கொடிங்க, பேனருங்களைப் பார்த்தாலே கண்டுக்காம விட்டுடுவாங்க.

செயலாளர் சொற்பொழிவு மாதிரி உரத்த குரலில் எல்லாருக்கும் கேட்கும்படி சொன்னார். லர்ரிகள் புறம்

நி-2