பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,逻28 நிசப்த சங்கீதம்

அப்பாவுக்கு நேரடியாக டெலிஃபோன் செய்து, ஏன் இப்படி எங்களை வதைக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் உங்கள் அடியாட்களை ஏவி எங்களை ஒரேயடியாகக் கொன்று விடுவதுதானே?’ என்று ஆத்திரத். தோடு ஆத்திரமாகக் கேட்டுவிடலாம் போலத் தோன்றிது ம. மங்காவுக்கு. r . .

உடனே மங்காவையும் அழைத்துக்கொண்டு போய்த் தம்மேலும் தமது இயக்கத்தின் மேலும் ஈடுபாடுள்ள ஒரு வக்கீலைச் சந்தித்தார் சிவகாமிநாதன். முத்துராம. லிங்கத்தின் மேல் போலீஸார் தொடுத்துள்ள வழக்கோ, குற்றச்சாட்டுக்களோ செல்லுபடியாகாதென்று வக்கீல் உறுதியாகக் கூறினார். தாமே வாதாடுவதாகவும் ஒப்புக் கொண்டார் . . . . . .

முத்துராமலிங்கத்தைச் சென்று சந்திப்பதாகச் சிறை. யில் அவர்கள் முயன்றது வீணாயிற்று. அவன் பாடிய கவிதையில் ஒரு வார்த்தையும் எங்கோ நடந்த ஒரு கொலை யில் சடலத்தைச் சுற்றித் துாவியிருந்த துண்டுப் பிரசுரங். களில் காணப்பட்ட ஒரு வார்த்தையும் ஒன்றாக இருக்கிறது. என்பதற்காக அவனை இப்படி ஒர் ஆள் தூக்கிச்சட்டத்தின் இழ்க் கைது செய்துகொண்டு போயிருப்பது அதிசயமாகப் பட்டது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்று. போராடியதைவிடச் சொந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்று போராடுவது அதிகக் கொடுமை நிறைந் ததாக இருக் தது. அரசியல் உலகிலும் சமூகத்திலும் செல்வாக்கு. நிறைந்தவர்களாக இருக்கும் பலர் மூலம் முயற்சி செய்தும் முத்துராமலிங்கத்தை ஜாமீனில் வெளியே அழைத்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சிரமப்பட்டு முயற்சி செய்தும் அந்த விஷயத்தில் அவருக்குத் தோல்வியே

இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்து இவர் களின் மண்டை ஒடுகளை மியூஸியங்களில் வைத்தால்தான். சமூகப் புரட்சி விளைந்து சமத்துவம் மலரும்' என்று செந்.