உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 229

திறக் கையெழுத்துக்களால் கிறுக்கப்பட்ட பிரசுரங்கள் கொல்லப்பட்ட களம்பூர் மிராசுதாருக்கு அருகே கிடந்தன வாம். அதிலும் மியூளியம் என்று வருகிறது. ஆகவே தான் சந்தேகப்படுகிறோம்" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டவாதம் திட்டமிட்ட கட்டுக்கதை போலிருந்தது. எல்லாமே திட்டமிடப்பட்ட பயமுறுத்தல்தான் என்பது போகப் போகப் புரிந்தது. முத்துராமலிங்கம் கைது செய்யப் பட்ட தினத்தன்று இரவு நேரில்தான் பார்க்க அநுமதி இல்லை. நீங்கள் விரும்பினால் அவரோடு ஃபோனில் பேசலாம். அங்கே அவரைச் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலுள்ள ஃபோனில் வந்து உங்களோடு பேச ஏற்பாடு செய்திருக்கிறோம்! இதையும் நாங்கள் செய்யக்கூடாது. செய்யமுடியாது. உங்களுக்காகத்தான் இதையே செய் கிறோம்! என்று நைச்சியமாகச் சொல்லிப் போலீஸ் தரப்பிலிருந்தே வந்து மங்காவைக் கூப்பிட்டார்கள்.

சிவகாமிநாதன், மங்கா, இருவருமே அதை நம்பி னார்கள். போலீஸ்காரர்கள் கூட மனிதாபிமானக் கண் ணோட்டத்தில் போனால் போகிறதென்று உதவ முன் வரு சிறார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது. அவளுக்கு. - அரசாங்க கெடுபிடிகளையும் மீறிச் சில போலீஸ் அலுவலர் களும் உத்தியோகஸ்தர்களும் நல்லவர்களாக இருப்பதில் இரக்க குணமுள்ளவர்களாக இருப்பதையும் சிவகாமி நாதனே பொது வாழ்வில் அடிக்கடிப் பார்த்திருக்கிறார். இதைப் பற்றியும் அவர் அப்படித்தான் எண்ணினார். முதலில் தாமே போலீஸ் ஸ்டேஷனுக்கு அவளோடு கூடப் போய் வரலாமா என்று எண்ணினார். அப்புறம் மகன் பாண்டித்துரையையும், மகள் கஸ்தூரியையும் கூப்பிட்டு, "மங்கா அக்காவோட போலீஸ், ஸ்டேஷன்வரை கூடப் போயிட்டு வாங்க'.என்று உடன் அனுப்பினார்.

அவர்கள் மூவரும் ஜீப்பில் தேடி வந்திருந்த போலீஸ் தரப்பு ஆளோடு ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். ஸ்டேஷ்

நி-15