உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 231

இருக்கும் என்ற அநுமானத்தை வைத்துப் போலீஸ்காரர் களின் உதவியோடு தந்தை தன்னை மிரட்டியிருக்கிறார் என்பதை உணர்ந்தபோது அவள் குமுறினாள். அழைத்துச் சென்றது போலவே மிகவும் மரியாதையாக போலீஸ் ஜீப் மூலம் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடப்பட் டார்க்ள். - - -

ஸ்டேஷனில் நடந்ததைச் சிவகாமிநாதனிடம் சொன் னாள் அவள். -

கேட்டுவிட்டு நிதானமாக மறுமொழி கூறினார் அவர். . - . -

உங்கப்பா அரசியல் நடத்துகிற மாதிரியே குடும்ப விஷயங்களையும் அரட்டி மிரட்டிச் சமாளித்துவிடலாம்னு நெனைக்கிறார் போல்ருக்கு.” . . "இனிமே.இந்த ஜென்மத்திலே நான் அவர் சொல்ற தைக் கேக்கப் போறது இல்லே.

"உனக்கு அந்த உறுதி இருக்கிறதுன்னாச் சந்தோஷம் தான் அம்மா."

இங்கே மங்காவின் மனத்தைக் கலைக்க இப்படி முயன்ற இதே நேரத்தில் சின்னியும் வேறு சில நண்பர்களும் மந்திரியின் ஆசியுடன் விசேஷ அநுமதி வழங்கப்பட்டுச் சிறைச் சாலைக்குச் சென்று முந்துராமலிங்கத்தைச்

சந்தித்தார்கள்.

"உனக்கு ஏனப்பா இந்தப் பேஜார் புடிச்ச வேலையெல் லாம்: பேசாம கம்னு எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. சிவகாமிநாதன்தான் என்னைப் பயங்காட்டி, மிரட்டி இந்தக் கண்ணாலத்தைப் பண்ணி வச்சாருன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் குடுத்தியானா-நிங்மதியா வெளியிலே வந்துடலாம், உன் மேலே ஒருத்தன் கை வைக்க மாட்டான். ஒரு வேலையைத் தேடிக்கினு நீ பாட்டுக்கு மெட்ராஸ்லே நிம்மதியா இருப்பே. இது இன்னாத்துக்குப்பா இந்தப் பெரிய எடத்து விவகாரத்