23.2 நிசப்த சங்கீதம்
'திலே போய்த் தலையை விட்டே! கழுத்துக்குக் கத்தி, வைக்கிற விரோதத்தைப் பார்த்துத் தேடிக்கிட்டி
யேப்பா? -என்று மிகவும் உரிமையோடு ஆரம்பித்தான்
சின்னி. . • . -
"நீயா வந்தியா? யாராவது சொல்வி ஏவிவிட்டு வந்தியா?'-என்று கோபமாகப் பதிலுக்கு அவனைக் கேட். டான் முத்துராமலிங்கம். - . . ."
"யார் சொல்லியும் நான் வரலேப்பா நம்ம. தோஸ்தா கொஞ்ச் நாள் பழகின ஆளாச்சேன்னு உன்
கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன்,'
"உன்னைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம் சின்னி: ஆனா இது மாதிரி விஷயத்திலே உன்னோட யேசானைஅறிவுரை எதுவும் எனக்குத் தேவைப் படாது. நீயும் தெரிஞ்சுக்க. உன்னை இங்கே அனுப்பிச்சு வச்சவங்களுக் கும் நல்லாத் தெரிகிற மாதிரிப் போய்ச் சொல்லு.
'இன்னா வாத்தியாரே! இதுக்குப் போயி இத்தனை கோபிக்கிறீயே...?' என்று பல்லை இளித்தான் சின்னி. அவனுடைய சாராய வியாபாரம்-விபசார விடுதி நடத்து வது எல்லாவற்றுக்கும் கட்சியும் கட்சி மேலிடமும் உதவியா யிருந்து வந்ததனால் கட்சி மேலிடத்தில் யாராவதோ அல்லது மந்திரியோ அவனைத் தூண்டிவிட்டு இங்கே. அனுப்பியிருக்கக்கூடும் என்று புரிந்தது முத்துராமலிங்கத் துக்கு. ... ." * .
தனது எஜமானர் தூண்டிவிட்டு வந்ததாக மட்டும் முத்துராமலிங்கம் கருதிவிடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ சொந்த முறையில் அக்கறை காட்டுவது போல வும் அவனிடம் பேசினான் சின்னி. அவனைச் சுலபமாகத் தவிர்த்து அனுப்பிவிட்டான் முத்துராமலிங்கம். சிவகாமி. நாதனை நம்பினால் பிழைத்துப் பணம் காசு சேர்த்து முன் னுக்கு வர இயலாது என்கிற தொனியில் சின்னி பேசியதை
முத்துராமலிங்கம் இரசிக்கவில்லை.