பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2as

ஒரு குறிப்பிட்ட நாள் கெடுவுக்குள்ளாக முத்துராம லிங்கத்தைக் கோர்ட்டில் ஆஜர் செய்து குற்றச்சாட்டை நீதிபதிக்கு முன் ஆதாரத்துடன் நிருபித்து அவனைக் கைது செய்தது சரியே என்று நிறுவ வேண்டிய நேரம் வந்தது. பேர்வீசுக்காக அரசாங்க வக்கீல் ஆஜரானார். முத்துராம லிங்கத்துக்காகச் சிவகாமிநாதனின் நண்பரான அந்தத் தேசபக்த வக்கீல் ஆஜரானார். நியாயவுணர்வில் கனிந்த மனமும் யாருக்கும் எதற்கும் அஞ்சாத ஆண்மையும் உள்ள ஒரு நீதிபதிக்கு முன் வழக்கு விசாரணைக்குப் போயிற்று. அரசாங்க வக்கீல் முத்துராமலிங்கத்தின் மேலுள்ள குற்றச் சாட்டை விவரித்தார். களம்பூர் மிராசுதாரின் சடலத் தருகே கிடைத்த துண்டுப் பிரசுரத்தினையும் முத்துராம விங்கத்தின் கவிதையையும் ஒப்பிட்டார் அவர். -

ஒரே ஒரு வார்த்தைக்காக குற்றம் சாட்டிக் கைது செய்வதானால் நாட்டிலுள்ள புந்தகங்கள், பத்திரிகைகள் அகராதிகள் எல்லாவற்றிலும் எங்கெங்கே அந்த வார்த்தை வருகிறதோ அந்த வார்த்தையை அப்படி எழுதியவர்களை எல்லாம் பிருவெண்டிவ் டிடென்ஷனில் பிடித்து உள்ளே போட வேண்டியிருக்கும் என்னைப் பொறுத்தவரை முத்து

ராம்லிங்கத்தின் இந்தக் கவிதையைவிட தேசத்தின் நலனில்: அக்கறை காட்டிக் கவலைப்படும் இலக்கிய உத்வேகமுள்ள பகுதி வேறொன்று கிடைக்க முடியாது. இதை எழுதிய வரைத் தேச விரோதியாகவும் சமூக விரோதியாகவும் சித் திரித்து வழக்குத் தொடுப்பதைப் போல அக்கிரமம் வேறு இருக்க முடியாது - என்று வாதிட்டார் முத்துராமலிங்கத் தின் வக்கீல். - - - - ... . . . . . . .

கோர்ட் மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுக் கலைந் தது. மறுநாள் தீர்ப்பைக் கேட்கக் கோர்ட்டில் பெருங் கூட்டம் கூடிவிட்டது. -

குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால், முத்துராமலிங்கத்தை விடுதலை செய்வதாகத் தீர்ப்பு வழங், கிய நீதிபதி-தமது தீர்ப்பில் துணிந்து அவனது அந்தக்