பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 235

பத்திரிகைக் கடன்களுக்கும் அரசாங்கமும் ஆளுங் கட்சி யும் தம்மேல் ஜோடிக்கும் பொய் வ்ழக்குக்களுக்கும் பதில் சொல்லவே சரியாயிருந்தது அவருக்கு. அத்தனை சிரமங் களுக்கும் வேதனைகளுக்கும் நடுவிலும்கூடச் சிறுமை கண்டு பொங்கும் இயல்பும், தீமைகளைச் சாடும் கோபமும் குறை யாமல் அவர் வாழ்ந்ததைக் கண்டு முத்துராமலிங்கம் அவரை வியந்தான். வணங்கினான்.

பாடல்களோடு இரண்டொரு படங்களுக்குத் திரைக் கதை வசனம் எழுதும் வாய்ப்பும் சண்முகத்தால் அவனைத் தேடி வந்தன. - -

'உன்னை யார் யாரோ சினிமா ஆளுங்க கார்லே. தேடி வராங்க. அவங்களை வாங்கன்னு உள்ளே கூப்பிட்டு உட் காரச் சொல்லக்கூட வசதி இல்லாத வீடு இது! இப்ப உன்னாலே உன் கால்லே நிற்க முடியும்னா நீ அடையாறி, லேயோ, மைலாப்பூர்வியோ ஒரு தனி விடு பார்த்துக்கிட்டு போகலாமே?' என்று மெல்ல ஆரம்பித்தார் சிவகாமி நாதன். முத்துராமலிங்கம் கறாராகப் பதில் சொல்லி விட்டான். . . . . . . . - -

"முடியாது ஐயா! இங்கேதான் இருப்பேன். வசதியில் லாதப்ப இங்கே ஒண்டிக்கிறதும் கொஞ்சம் வசதிவந்தப்ப ஒண்டியிருந்த எடத்தை உதறித் தள்ளிட்டுப் போறதும் என்னாலே முடியாது...எனக்கு இங்கே ஒரு வசதிக்குறைவும் இல்லே. என்னை தேடி வர்ரவன் இங்கே வந்தர் வரட்டும். வராட்டிப் போகட்டும்.'

-முத்துராமலிங்கமும், மங்காவும் தொடர்ந்து அங் 'கேயே இருந்தார்கள். வழக்கம்போல் அவருக்கு எல்லா விதங்களில் உதவினார்கள். எல்லா வேலைகளையும் சுபாவ மாகச் செய்தார்கள். - . . . . . . .

மந்திரி எஸ். கே. சி. நாதன் எதைப் பற்றிய நிலைமை களையோ கண்டறிந்து வர அமெரிக்காவுக்கு ஒரு மாதப் பயணம் போயிருந்தார். மந்திரியாக வந்ததுமே சர்க்கார்