22 நிசப்த சங்கீதம்
பட்டன. பீடிப்புகை, சாலைப் புழுதி நெடி, டீஸல் நாற்றம், வியர்வை நாற்றம். எல்லாம் கலந்து சங்கமித்த வாடை போகிற வழியெல்லாம் நிறைந்திருந்தது. மற்ற ஊர்களிலிருந்தும் லாரிகள், பஸ்கள், வேன்கள், ஜீப்கள், கார்கள் என்று எங்கே பார்த்தாலும் எந்தச் சாலையில் பார்த்தாலும் சென்னையை நோக்கிப் பறந்து கொண்டி ருந்தன. - - - -
எல்லாச் சாலைகளிலும், எல்லாரும், எல்லாமும் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். எங்கும் கட்சிக் கொடிகள், எங்கும் சின்னங்கள், எங்கும் கோஷங்கள் தான் நிரம்பியிருந்தன. - -
அந்தச் சூழ்நிலையில் அந்தக் கூட்டத்தில் அதில்
ஒருவனாக ஒண்டிக்கொண்டு கூசிக் கூசிப் பயணம் செய்தான் முத்துராமலிங்கம். r - - "அண்ணனைத் தொந்தரவு பண்ணாதே! அவரு பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்துப்பாரு' என்று அவன்மீது தனிப்பட்ட சலுகையையும், கருணையையும் பொழிந்து கொண்டிருந்தாள் கண்மணி.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல் லாரியில் சென்று கொண்டிருந்தவர்களின் கோஷம். மங்கியது. குரல்கள் தூக்கத்தின் ஆரம்ப அடையாளத்தைத் தொனித்தன. உட்கார்ந்தபடி சிலரும், நின்றபடியே சிலரும், சாய்ந்தபடி சிலரும் துரங்கி வழியத் தொடங்கினார்கள்.: -
மணி ஒன்று. லாரி உளுந்துார்ப்பே ட் ைட ைய நெருங்கிக் கொண்டிருந்தது, கோஷங்கள் அநேகமாக ஒய்ந்து எல்லாரும்ே தூங்கி வழிய ஆரம்பித்திருந்தார்கள்.
3.
விரி ஒரு குலுக்குக் குலுக்கிக்கொண்டு அதிர்ந்து
நின்றது. தூக்கக் கிறக்கத்திலிருந்த குமாரி கண்மணி அப்படியே கட்டித் தழுவினாற்போல முத்துராமலிங்கத்தின்
மேல் நிலைகுலைந்து வந்து விழுந்திருத்தான்.