உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23.9

இங்கே இருக்கனும்'னாரு இப்ப நான் கொஞ்சம் சம்பாதிக் கிறதைப் பார்த்து, "நீ ஏன் இங்கே இருந்து சிரமப்பட ணும் அப்பா? தனியா ஒரு நல்ல வீடு பார்த்துக் கிட்டுப் போகலாமேங்கிறாரு?" . . . . . . . . ... ?

"ரொம்பப் பெரிய மனுஷன்"- . "ஆனா உங்கப்பா மாதிரிச் சின்ன மனுஷங்களுக்குத் தானே இது காலமாயிருக்கு?"

iš g து :

அதன் பிறகு தியாகியின் குரல் பத்திரிகை வரப் போகும் தியாகி சிவகாமிநாதனின் மணி விழாவை எப்படிக் கொண்டாடுவது போன்ற பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் கடற்கரையி விருந்து புறப்பட்டார்கள். இப்போது அவர்கள் மனத்தில் எந்தக் கவலையும் எந்தப் பயமும் இல்லை.

கடற்கரை உட் சாலையில் ஒரே ৪৫ அம்பாஸிடர் காரும் சுற்றி நாலைந்து ஆட்களும் சிதறினாற்போல நின்று. கொண்டிருந்தனர்.

அவர்கள் அந்தக் காரருகே நடந்தபோது உள்ளே இருந்த டிரைவர் கார் ஹெட்லைட்டைப் போட்டு அணைத் தான். - X- - . - * * 3, அடுத்த நிமிஷம் அந்த நாலைந்து பேரும் ஒன்று. சேர்ந்து குபிரென அவர்களை வளைத்துக் கொண்டனர். இருவர் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டி "மூச்சு விடக் கூடாது! நீங்க ரெண்டு பேரும் உடன்ே காரில்

மங்கா நடுங்கிப் போனாள். முத்துராமலிங்கம் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தைரியமாக நின்றுதப்பும் வழியை யோசித்தான். சட்டைப் பையிலிருந்த மணி. பர்ஸை வெளியே எடுப்பதுபோல் அதை மணலில் வேண்டு மென்றே நழுவ விட்டான். நழுவிய மணிபச்சை எடுக்கக் கீழே குனிவதுபோல் குனிந்து இமைக்கிற வேகத்தில்