பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நிசப்த சங்கீதம்

மணலை அள்ளி எதிரே நின்றவர்கள் முகத்தை நோக்வி விசினான். இன்னொரு கையால் ஒருவனைக் காலை வாரி விட்டான். எல்லாம் படுவேகத்தில் நடைபெறறன. அவனால் காலை வாரிவிடப்பட்டு விழுந்தவனிடமிருந்து நழுவிய கத்தியைக் கையிலே எடுத்துக்கொண்ட முத்துர்ாம விங்கம் புயலாக மாறி அவர்களைத் தாக்கத் தொடங் கினான். அவர்களும் அவனைத் தாக்கினார்கள். அந்த ஒரிஸ்ட் பஸ் ஒன்று கடற்கரைச் சாலைக்குள் புகுந்து அங்கே வரவே முரடர்கள் காரில் ஏறிக்கொண்டு ஒட்ட மெடுத்தார்கள். முத்துராமலிங்கம் அந்தக் கார் நம்பரைக் குறிக்க முயன்றான். அது மிக மங்கலாக இருந்ததால் பாதி நம்பர்த்ான் தெரிந்தது.

35

அவர்கள் இருவரும் கடற்கரை உழைப்பாளிகள் சிலை யுருகே மேலே ஏறி வந்திருந்தார்கள். ' என்ன நடந்திச்சுப் பார்த்தியா? உங்கப்பா இன்னும் ஒய்ந்து அமைதியடைந்து விடவில்லை. வெளிநாட்டுக்குப் போயிருந்தாலும் நமக்கு ஆள் ஏற்பாடு பண்ணித் த்ொல்லை கொடுத்துக்கிட்டுத் தான் இருக்காரு...' - - - 'இந்த டூரிஸ்ட் பஸ் மட்டும் சமய சஞ்சீவியா வரலேன்னா நம்மைக் கடத்திக்கிட்டே போயிருப் பாங்க." - - - . 1 - என் உடம்பிலே உயிர் உள்ளவரை அப்படி நடக்க முடியாது. விட மாட்டேன் மங்கா."

அவன் குரலில் நிச்சயமும் இரும்பின் உறுதியும் ஒலித்தன. -

பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தின் அருகே சவாரி இறக்கி விட்டுவிட்டுக் காலியாகத் திரும்ப இருந்த ஒர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி வீடு திரும்பி னார்கள் அவர்கள். -