நா. பார்த்தசாரதி - , 241
அவர்கள் வீடு திரும்பியபோது சிவகாமிநாதன் வீட்டில் இருந்தார். வழக்கமாக அவர் இரவு உணவை முடிக்கும் நேரத்துக்குமேல் ஆகியிருந்தும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். -
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது மெதுவாக, நடந்ததை அவரிடம் விவரித்தான் முத்துராம்லிங்கம். இரண்டு சுக்கா சப்பாத்தியும், கொஞ்சம் வேக வைத்த காய்கறியும் அரை டம்ளர் பாலும் மட்டுமே இரவில் சாப்பிடும் பழக்கமுடையவர் அவர். முதலிலேயே உண்டு. முடித்திருந்தும், அவர்களோடு சேர்ந்து எழுந்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேசியபடியே உடன் அமர்ந்திருந்: தார். அவர் மங்காவைப் பார்த்துச் சொன்னார் : -
"உங்க ரெண்டு பேரையும் பழி வாங்கற வேண்லயை ரெளடிகளிடம் ஒப்பட்ைச்சிட்டுத்தான் உங்கப்பா வெளி நாடு. போயிருக்கார் போலிருக்கு. - - -
"எங்கப்பாவே ஒரு ரெளடிதானே ஐயா?
கொஞ்சம் உயர்தரமான ரெளடிங்க பெரிய பெரிய பதவிகளிலே இருக்காங்க. சுமாரான ரெளடிங்க அவங் களுக்கு உதவிபுரியிற நிலையிலே இருக்காங்க. அதுதான் இன்னிக்கு இந்த நாட்டு நிலை. நீ சொல்றது சரிதர்ன்.
எங்கம்மா இங்கே தேடி வந்திருந்தப்பச் சொன் னாங்க தியாகியின் குரலை வாரம் வாரம் வரவழைச்சு அவரைப் பத்தி , நான் எழுதற கட்டுரையை அப்பா இரகசியமாப் படிக்கிறாராம். ரொம்பக் கோபமாம்."
"இந்தச் சண்டை தகராறு அடிபிடி எல்லாம் நிற்கணு மானா நீ இனிமே அதை எழுதாம விட்டுட்டாலே போதும்னு எனக்குத் தோணுது.' - * . . . . கூறிவிட்டு அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் சிவகாமிநாதன். அவர் தன்னுடைய உறுதியைச் சோதிக்
கிறார் என்று தோன்றியது அவளுக்கு.