பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நிசப்த சங்கீதம்

'அவர் திருந்தநவரை அல்லது மக்கள் அவரது அசல் உருவத்தைப் புரிஞ்சுக்கறவரை அதை நான் நிறுத்தப் போற தில்லே...' என்று அவருக்கு அப்போது உறுதியாக மறு மொழி கூறினாள் அவள்.

முத்துராமலிங்கத்தையும், மங்காவையும் அதிகமான கவனத்துடனும் ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்குமாறு எச்சரித்தார் அவர். இரவு உணவு முடிந்த பின்னும் நெடு நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் . . . . . . .

மறுநாள் காலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று முத்துராமலிங்கத்தை உடனழைத்தாள் மங்கா. முதல்நாள் இரவு கடற்கரையில் தங்களை, காரில் கடத்திக் கொண்டு போக முயன்ற ரெளடிகளிடம் இருந்து தப்பவழியருளும்படி அவள் கற்பகாம்பிகையைமனத்துக்குள் வேண்டிக்கொண்டிருந்தாளாம், அம்பிகையின் அருள் தான் அந்த வேளையில் ஒரு ரிேஸ்ட் பஸ்ஸாக வந்து தங்களைக் காப்பாற்றியது என்று அவள் நம்பினாள். அதனால் விடிந்ததும் உடனே போய் அங்கே அர்ச்சனை செய்து வழி படவேண்டும் என்று. அவளுக்குத் தோன்றியது.

அவளைக் தனியே அனுப்புவது பாதுகாப்பில்லை என்று அவனுக்குப்பட்டது. அவனும் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டான், .

கோவிலில் அர்ச்சனை தரிசனம் எல்லாம் முடிந்துவலம் வரும்போது பிராகாரத்தில் தற்செயலாக அம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. எதிரெதிரே பார்த்துக் கொண்டபோது இருவருக்கும் ஒரு நிமிஷம் என்ன பேசுவதென்று தெரிய வில்ல்ை. இருவரும் சில விநாடிகள் அப்படியே திசைத்துப் போய் நின்று விட்டனர். தாய்க்கும் மகளுக்கும் நடுவே குறுக்கிட விரும்பாமல் முத்துராமலிங்கம் ஒதுங்கி நின்று கொண்டான். ஒரு வேளை தான் மங்காவுடன் அருகே நின்றால் அவள் தாயின் கோபம் அதிகமாகலாம் என்ற தயக்கமும்,அவன்மனதில் அப்போது இருந்தது. அவன்விலகி ஒதுங்கி நின்று க்ொண்டதற்கு அதுவும் ஒரு காரணம்.