பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 243

அம்மாதான் முதலில் பேசினாள் :

நீ நல்லா இருக்கணும்னுதாண்டீஅம்மனை வேண்டிக் .கிட்டேன்."

உன் நல்லெண்ணத்துக்கு நன்றி அம்மா! ஆனா அது பலிக்குமா இல்லையான்னுதான் எனக்குச் சந்தேகமா இருக்கு.அப்பா என்னடான்னா எங்களைக் கடத்திக்கிட்டுப் போறத்துக்கும். உதைக்கறத்துக்கும், அடிக்கறத்துக்கும் ரெளடிப்பு:சங்களை ஏற்பாடு பண்ணித் துரத்திக்கிட்டிருக் காரு. நீ நினைக்கிறது நடக்குமா, அவர் நினைக்கிறது . நடக்குமான்னு தெரியலே!" என்று தொடங்கி முந்திய இரவு கடற்கரையில் நடந்ததை விவரித்தாள்.

கேட்டு முடிந்ததும் அம்மா அழத் தொடங்கிவிட்டாள். "ஐயோ! எனக்கு அப்படிக் கெட்ட எண்ணம்லாம் கெடையாது உ! நீ எங்க இருந்தாலும் பூவும் பொட்டுமா நல்லா இருக்கனும்டிம்மா' என்று பொது இடத்தில் கண்ணிருகுத்து அழ ஆரம்பித்திருந்த அவளைத் தேற்றி அழுகையை அடக்கிச் சமாதானப்படுத்த முயன்றாள் மங்கா. அம்மா பேசிய பேச்சிலும், வார்த்தைகளிலும் தொனித்த ஆதங்கத்திலிருந்து அப்பாவின் பணத்தர்ன்ச, பதவி ஆசை, லஞ்ச ஊழல் மயமான அரசியல், எதுவுமே அவளுக்கும் பிடிக்கவில்லை எள்று தெரிந்தது.

'தனியா எங்கேயும் போகாதே ஜாக்கிரதையா இரு. உடம்பைச் கவனிச்சுக்க' என்று ஜபம் பண்ணுவதுபோல் திரும்பத் திரும்பக் கூறிவிட்டுப்போனாள் அம்மா'

"அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்து, முத்துராமலிங்கத்துடன் சேர்ந்து கொண்டாள் மங்கா.

கபாலீஸ்வரர் கோயிலிலிருந்து வீடு திரும்பும்போது அம்மாவுக்கும்.அப்பாவின் போக்குகள் பிடிக்கவில்லை என்று முத்துராமலிங்கத்திடம் விவரித்துக் கொண்டு வந்தாள் மங்கா. அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு மங்காவிடம் சொன்னான்: