பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நிசப்த சங்கீதம்

"பதவியில் இல்லாத காலத்துக்குப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகப் பதவியைப் பயன்படுத்துவது என்பது இங்கு ஒரு வழக்கமாகவே வந்துவிட்டது. துரதிர்ஷ்டவச மாக உன் தந்தை இதில் இன்று முன்னணியில் இருக்கிறார்."

அவர்கள் கோயிலிலிருந்து வீடு திரும்பியபோது சிவகாமிநாதனிடம் யாரோ ஒரு சேட் வாயிவிலேயே நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்,

"பணத்துக்கு வழி சொல்லலேன்னா பிராப்பர்ட்டி மேலே அட்டாச் பண்ணி இந்த வீட்டை ஜப்திக்குக் கொண் டாந்துட வேண்டியதுதான் என்று இரைந்து கொன் டிருந்த அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சிவகாமிநாதன். சேட் போகிறவரை ஒதுங்கி நின்றிருந்த முத்துராமலிங்கம் அந்த சேட் எதற்காக இரைந்துவிட்டு போகிறார் என்று சிவகாமிநாதனிடமே விசாரித்தான். அவர் பதில் சொல்லாமல் மழுப்பினார். -

. உன்க்கு எதற்கு அதெல்லாம்? என் சிரமங்களைக் கூடிய வரை நான் பிறரிடம் சொல்கிற வழக்கமில்லை.

என்னையோ, மங்காவையோ, சண்முகத்தையோ நீங்க அந்நியமா நெனைக்கக் கூடாது ஐயர் காரணம், நாங்க உங்களை ஒரு விநாடிகூட அந்நியமா நெனைக்கிற தில்லே...' ; : *, *. . . . - * . . .

நீங்க அப்படி நெனைக்கலேங்கிறதுக்காக என் கஷ்டங் 'களை எல்லாம் உங்க தலையிலே திணிக்கிறது. நியாயமா.

இருக்காது அப்பா! - .

உங்க கஷ்டங்களை நீங்க எங்களுக்குச் சொன்னா

அதைச் சுமக்கிறதிலே எங்களுக்கும் பங்கு உண்டுன்னு: அந்தச் சுமையைச் சந்தோஷமா, நாங்க் ஏத்துப்போம் "ஐயா! தயவுசெய்து சொல்லுங்க...' -

"பிரஸ், வீடு எல்லாத்து மேலேயும் கடன் இருக்கு. எல்லாத்தையும் ஏலத்துக்குக் கொண்டாந்துடுவேன்னு: தான் கூப்பாடு போட்டுட்டுப் போறான்.' .