உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 247

உலகுக்குத் தெரியாமல் மறைத்துக்கொண்டு விடுகிறார்கள் என்பதற்கு அவர் சரியான உதாரணமாயிருந்தார்.

முத்துராமலிங்கமும், சண்முகமும், மங்காவும் பிற தொண்டர்களும் இராப்பகல் பாராமல் ஒடியாடி மிகவும் உழைத்தார்கள், உதவி நிதிக்கான நாடகங்களுக்கு டிக்கட் விற்றார்கள். வசூல் செய்தார்கள். விழா ஏற்பாடுகளை கவனித்தார்கள். பம்பரம் போல் சுழன்று உழைக்கும் சேவகர் பட்டாளம் ஒன்று சிவகாமிநாதனுக்காகக் காத்திருந்தது. அவர்களுடைய ஒத்துழைப்பு இப்போது முத்துராமலிங்கத்துக்குப் பயன்பட்டது.

பொதுவான சமூக அரசியல் பிரச்னைகளில் எதிர் நீச்சலிட்டாவது நியாயம் காண வேண்டும் என்ற துடி துடிப்போடு பல ஆண்டுகளாக வாழ்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்த அந்த தியாகியிடம் முத்துராமலிங்கத்தைப் போல் அதே எதிர் நீச்சல் குணமுள்ள பல இளைஞர்கள்

ஈடுபட்டிருந்தார்கள். . . " . . . . . . . . . . .

ஒவ்வோர் ஆரோக்கியமான ஜனநாயக நாட்டிற்கும் இப்படிச் சில எதிர்நீச்சல்காரர்கள் வேண்டுமென்று முத்து ராமலிங்கம் முதலிய இளைஞர்கள் உறுதியாக நம்பினார் கள். இந்த எதிர்நீச்சல்காரர்களுக்கு உதவி இவர்களைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள். - நிதி உதவிக்கான நாடகங்கள் மூலமாகவும், பிற வசூல் கள் மூலமாகவும் சேர்ந்த தொகையை ஒர் எளிய விழாவில் தியாகி சிவகாமிநாதனிடம் அளித்தார்கள். அவர்கள் பாராட்டுவிழா, புகழுரை, மாலை, முகஸ்துதி இதிலெல் லாம் அவருக்கு, நம்பிக்கை இல்லை என்பதால் அவற்றை அவர்கள் தவிர்த்திருந்தார்கள். "இன்றைய உலகில் மூன்று விதமான லஞ்சங்கள் அதிகக் கவர்ச்சியோடு வழங்கவும் விரும்பவும் படுகின்றன. பணம், பெண், புகழ் மூன்றையுமே இடமறிந்து பாத்திரமறிந்து லஞ்சமாகப்பயன்படுத்துகிறார் கள். நியாயங்களும், உண்மைகளும் இந்த லஞ்சங்களுக்குப் பலியிடப்படுகின்றன. நவீன உலகில் முகஸ்துதி என்பது,