பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 253.

முடியவில்லை. கவியுள்ளம் படைத்தவனாகிய அவன் மனம் குமுறியது.

சின்னி தன்னிடம் ஏதோ விசாரித்ததை - வினர்வி பதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அங்கிருந்து வெளி பேறித் தெருவுக்கு வந்தான் அவன். - *

"ஐயோ என்னைவிட்டுடு என்னை விட்டுடு...கொன் னுப்புடாதே'- என்ற குரல் தெருவின் எதிர்ச்சிறகிலிருந்து கேட்டது. இப்போதும் அந்தப் பைத்தியம் தலைவிரிகோ.ை மாக் ஒடிக்கொண்டிருந்தாள். . . . " -

ஏற்கெனவே மயானமான அந்த நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தும் இப்போது ஓசை ஒலியற்று. அடங்கி நிஜம் மயானமாகவே ஆகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. எல்லாவிதமான ஓசைகளிலிருந்: தும் சப்தங்களிலிருந்தும் உடனடியாக விடுபட விரும்பிய அவனுக்கு அந்தச் சோக நிசப்தம் கற்பனையே ஆனாலும் அப்போது இதமாக இருந்தது. ஒசைகளைக் கெர்ன்றபின் எஞ்சும் இதமான மெளனத்தையும் சப்தங்களை அழித்த பின் எஞ்சும் இலகுவான நிசப்தத்தையும் அந்தப் பலவீன மான வேளையில் ஒருகணம் அவன் மனம் தற்காலிகமாக நாடியது. ஒசையில் கரைந்து போவதைவிட இந்த மெளனத் தில் கரைந்து போவதை அந்த தொடியில் விரும்பினான். அவன். சப்தத்தில் கரைந்து உருத்தெரியாமல் போவதை விட நிசப்தத்தில் உருத் தெரியாமல் கன்ரந்து போவது நல்லதென்று அவன் எண்ணினான்.

ஆனால் எவ்வாம்'ஒரே ஒருகணம்தான்! அடுத்தகணமே அவன் மனம் விசுவரூபம் எடுத்தது. அவன் நினைவுகள்

உயர்ந்து நின்றன. ஆயிரம் கைகளை அடைந்து அவை அத்தனையாலும் நல்லவற்றுக்காகப் போராட தர்மபுத்தம் நடத்தத் தயாராக வேண்டுமென்று தன் ஞானத்தந்தை யாகிய சிவகாமிநாதனுக்கு வாக்களித்திருப்பது அவனுடைய

நினைவில் வந்து உறுத்தியது.