உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நிசப்த சங்கீதம்

முடியவில்லை என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக். கும் ஒரு சத்ய விவசாயி-இவர்களை எல்லாம் ஞாபகம். வைத்துக் கொள்வது உங்களுக்கு அப்படி ஒன்றும் சிரமமா யிருக்காது என்று நினைக்கிறேன்.

சத்ய விவசாயங்களில் அறுவடையும் மகசூலும்கூட அவ்வளவு சீக்கிரமாகக் கைக்குக் கிடைக்காது. சிறுகீரை பயிரிடுகிறவன் பலனுக்காகப் படுகிற அவசரத்தைத் தென்னை பயிரிடுகிறவன் படமுடியாது. படவும் கூடாது. பொது நலனுக்குப் போராடுகிற சத்ய விவசாயிகள் தென்னை பயிரிடுபவர்களைப் போன்றவர்கள் என்பது உங்களுக்கும் புரிந்திருக்க வேண்டியது அவசியம். வணக்கம், நன்றி. -

நிறைந்தது