24 நிசப்த சங்கீதம்
ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டும் உணர்ச்சி வசம்: பட்டும் நின்ற அந்தக் கூட்டத்தில் சமயோசிதமாகச் செயல் பீட்டு உரியதை நேரந்தவறாமல் செய்தவன் முத்துராம. லிங்கம்தான். கண்மணி அவனை வியந்தாள். பாராட்டி. ன்ாள். - -
"அண்ணே! நீங்க இல்லாட்டி இதுமாதிரி நடந்ததுக்கு. எனக்குக் கையும் ஓடாது- காலும் ஓடாது. நல்லவேளை!" சம்ய சஞ்சீவியாக இருந்து உதவினிங்க."- - -
"உங்க கட்சித் தலைவருங்கதான் எப்ப ஜனங்களுக்கு என்ன செய்யனும், ஏன் செய்யணும்னு தெரியாம.மு.ழிக்கிறாங்க கஷ்டப்படறவனுக்கு எது உடனே தேவைன்னு: புரியாம மலைச்சுப் போயிடறாங்க. அல்லது நான்தான் இதுக்குக் காரணம் நீதான் இதுக்குக் காரணம்னு சண்டை. போட்டுக்கறாங்க."
"தலைவர்கள் எவ்வழி அவ்வழிதான் தொண்டர்" களும்னு வச்சுக்குங்களேன்."
இதைச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்மணி. - "தண்ணிப் பஞ்சத்தாலயும், சோத்துப் பஞ்சத். தாலயும், அறிவுப் பஞ்சத்தாலயும் ஜனங்க கஷ்டப் பட்டிட்டிருக்கறப்ப - மகாநாடு - ஊர்வலம், சிலை வைப் பது. ஊர்ப்பெயர். தெருப் பெயரை மாத்தறது. வறுமையை, எதிர்த்து வாய்ப்பந்தல் பிரசங்கங்கள்னு நடத்திக்கிட் டிருக்கிற வகையிலே g செயல்படற தலைவர்கள் தான் எல்லாக் கட்சிகளிலேயும் இன்னிக்கு இருக்காங்க... . . .
இதற்குப் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிச் சமாளித்தாள் கண்மணி. அருகே இருந்த ஒரு டீக்கடை யிலிருந்து தனக்கும் அவனுக்குமாக டீ. வரவழைத்தாள் கண்மணி. கட்சி ஆள் ஒருத்தன் போய் அவன் செலவில் வாங்கி வந்தான். ... . - -
- வியாபாரம்போல் நடக்கிற அரசியலும், அரசியலால் பாதிக்கப்பட்ட ஊழல் மயமான வியாபாரமும் உள்ள