நா. பார்த்தசாரதி 25
தேசத்தில் எதுவுமே உருப்படாது" என்று அந்தச் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் முத்து இராமலிங்கம். - - -
இரவு இரண்டரை மணிக்குமேல் லாரிகள் மீண்டும் புறப்பட்டன. காற்றுக் குளிர்ந்து வீசலாயிற்று. திறந்த லாரியாக இருந்ததால் சில்லென்ற காற்று முகத்தில் வந்து அறைந்தது. களைப்பினால் முத்துராமலிங்கமும் சிறிது கண்ணயர்ந்து விட்டான். r ' . . . .
மறுபடி வெயில் முகத்தில்பட்டுச் சுள்ளென்று உறைத்த போதுதான் அவன் கண்விழித்தான். லாரி சென்னைக்குள் வந்திருந்தது. பக்கத்தில் கடல் அலைகளில் வெயில் பட்டுப் பளபளத்ததால் அது கடற்கரைச் சாலையாக இருக்க வேண்டுமென்று அவனுக்குப் புரிந்தது. -
- நகரின் தெருக்கள் எல்லாம் கோஷங்களாலும், தோரணங்களாலும், கூட்டங்களாலும், பஸ்கள், லாரி களாலும் நிரம்பி வழிந்தன. கடற்கரைச் சாலை முழுவதும்: வெளியூர்களிலிருந்து வந்திருந்த பஸ்களும், லாரிகளும்தான்
நிறைத்துக் கொண்டிருந்தன. -
நீச்சல் குளத்தையும், மீன் காட்சிக் கூடத்தையும் ஒட்டியிருந்த ஓரிடத்தில் உள்பக்கமாகச் சாலையில் இறங்கி: :மணற்பரப்பை ஒட்டி இருந்த கடற்கரைத் தார் ரோட்டில் லாரி நின்றது. - - -
'எல்லாரும் இறங்குங்க! அண்ணா சமாதி வந்தாச்சு. லாரி இங்கேயே நிக்கும். மறுபடி நாளைப்பொழுது சாயு ஹப்ப இங்கேயிருந்து ஊர் திரும்பும். அதுக்குள்ளார வற் திரணும்' என்று கண்மணி அறிவித்தாள். - - - , - ...,
"அண்ணன் எங்கே போவணும்? தங்க வேற எட மில்லையானா எங்கூடவே வந்தா லாட்ஜ்லே தங்கிக்க லாம்! கட்சி ஆளுங்க இங்கியே பக்கத்துலே திருவல்லிக் கேணியில்ே எனக்கு நான் வழக்கமாத் தங்கற ஒரு லாட்ஜ்லே இடம் போட்டு வச்கிருப்பாங்க" என்று முத்து ராமலிங்கத்தையும் தன்னோடு கூப்பிட்டாள் கண்மணி.