26 - நிசப்த சங்கீதம்
• இல்லே! நான் என் வேலை விஷயமா எங்கப்பாரு சொல்லியனுப்பிச்ச ஒருத்தரைப் பார்க்கணும். நான் இந்த ஊருக்குப் புதிசு...இந்த அட்ரஸைப் பார்த்து எப்பிடிப் போகணும்னு மட்டும் சொன்னால் போதும்' என்று தன் னிடமிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையின் முகவரியைக் கண்மணியிடம் காண்பித்துக் கேட்டான் அவன். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு -என்று குறித் திருந்தது அந்த முகவரியில். . . "
- இன்னிக்கு இருக்கிற கும்பலிலே டாக்ஸி ஆட்டோ எதுவும் கிடைக்கிறது கஷ்டம். பஸ்ஸிலே கும்பலா இருக்கும். அப்படியே இடம் பிடிச்சுப் போனாலும் உங்க இறங்கற இடம் புரிஞ்சு இறங்க முடியாது. உங்க உயரத் துக்குப் பஸ்ஸிலே நின்னிங்கன்னாக் கீழே தெருவைப் பார்க்க முடியறது சாத்தியமில்லே......' என்றாள், கண்மணி. - -
"வழி சொன்னிங்கன்னா நான் நடந்தே போயிறலா மில்லே?" - ' ' .
-அவனுடைய துணிவையும் நம்பிக்கையையும் கண்டு: கண்மணி புன்முறுவல் பூத்தாள். - -
ஏன் சிரிக்கிறீங்க......?" 'இல்லே! அண்ணனுக்கிருக்கிற நம்பிக்கையைப் பார்த்துச் சிரிப்பு வந்திச்சு......' -
புத்தம் புதிய கட்சிக்கொடி பறக்கும் சைக்கிள் ரிக்ஷா ஒன்று அப்போது அங்கே எதிர்ப்படவே, ரிக்ஷாவைக்ட் கைதட்டிக் கூப்பிட்டாள் கண்மணி.
'ரிக்ஷாவிலேயே போயிடlங்களா? விவரம் சொல்லி: அனுப்பறேன்.' - - - - r - நகர நாகரிகத்தின் போலிச்சாயல்கள் புரியாதகாரணத் தால் அத்தனை தொலைவுக்கு ரிக்ஷாவில் பயணம் செய்வது கொஞ்சம் தயங்கவேண்டிய காரியம் என்பதைக் கூட முத்துராமலிங்கம் உணரவில்லை.