பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27

ஆனால் அதற்கு என்ன செலவாகுமேர் என்று மட்டுமே அவன் தயங்கினான். - -

"அண்ணன் நடந்தே போய்ச் சேர்ரத்துக்குள்ளாரப் பாக்கவேண்டிய ஆளு வெளியே போனாலும் போயிறலாம். இங்கே மெட்ராஸ்லே உத்தியோகம் பாக்கற பெரிய மனு ஷங்களைப் பார்க்கணும்னாக் காலையிலே ஒம்பது ஒம்ப தரைக்குள்ளாரப் போயிரணும், இல்லாட்டி, வீட்டிலே அவுங்களைப் பார்க்க முடியாது." r

"அப்பச் சரி? நமக்குத் தோதுபடற வாடகையைப் பேசுங்க...என் கையில் வசதி அதிகம் இல்லே." - - "அடடே! அதுவா சங்கதி? நம்ம ஆளுக்கு ஒரு கஷ்டம்னா தாங்க விட்டுடுவமா? செலவுக்குப் பத்தாம்.டி நான்தாரேன் அண்ணே! எங்கிட்ட வாங்கிப்பீங்கள்ளே...?” "இப்ப வேணாம்! அவசியம்னாக் கேட்டு வாங்கிப் பேன்," - - -

-கண்மணி ரிக்ஷாக்காரனோடு பேரம் பேசி அவனை இரண்டு ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தாள். கட்சி அனு: தாபம் கொஞ்சம் துணை செய்திருந்தது. -

'ரெண்டு ரூபர் குடுங்கண்ணே இடம் விசாரிச்சுப் பத்திரமாக் கொண்டு போய் சேர்த் துடுவாரு.'" - -என்ன காரணத்தாலோ பிடிக்காத பெண்ணைக் கழுத்தில் கட்ட நேரும் ஒரு கலியாணத்து மணமகன்போல அந்தப் பெருநகரம், அதன் ஜன நெரிசல் சந்தடி ஆரவாரம் அனைத்தையும் வெறுக்கும் ஒட்டாத மனநிலையில் அப் போது இருந்தான் முத்துராமலிங்கம். -

திரும்பலாரி புறப்படுகிற தினத்தன்று ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்து கொள்ளும்படி கண்மணி. அவனுக்கு ஞாபகப்படுத்தி அனுப்பினாள்.

சைக்கிள் ரிக்ஷா கட ற்கரைச் சாலையிலே தெற்கு நோக்கிச் சென்று கிழக்குப் பக்கம் கடற்கரை மேட்டில்