உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நிசப்த சங்கீதம்

பார்த்தார். பெல்ஸ் அவனை ஏதோ அபூர்வமான அது. வரை பார்த்திராத காட்டு மிருகம் ஒன்றைப் turrrri iugi: போல் பார்த்தது. - . - . ...

'ஹல்ம் டு யூ...' என்று தொடங்கி, அப்புறம் இந்த ஆளுக்குத் தமிழில் கேட்டாலே போதுமென்று முடிவு: செய்து கொண்டாற் போல், யாரப்பாது? என்ன வேணும்'-என்று கேட்டார் ஆவர். .

சாதாரணமாக்க் கேட்டபோதே அதிகார தோரணை -யில் ஒரு குற்றவாளியை விசாரிப்பது போன்ற போலீஸ் கெடுபிடி தொனிக்கும் விசாரண்ைக் குரலாக இருந்தது. அது . " - ۰ ۶ و ... . . . -

'தான் ஆண்டிப்பட்டி-பக்ங்கிளித் தேவரோட சன் சார்! இன்னைக்கிக் காலையிலேதான் இங்கே மெட்ராசுக்கு வந்தேன். அப்பாரு உங்களைப் பார்க்கச் சொல்லி லெட்டர் குடுத்தனுப்பிச்சிருக்காரு சார்: . . .

போலிஸ் உயர் அதிகாரிகளின் முகமும் குரலும், இப்படித்தான் இருக்கும்-இருக்க வேண்டும் என்று மக்களி. டம்-ஏற்பட்டுவிட்ட குருர உருவகத்தின் நிதர்சனம் போல் அவரது முகத்தில் புருவங்கள் ஏறி இறங்கிச் சுருக்கம் காட்டின. ஓர் அம்புப் பார்வையால் அவனைத் துளைத் தார் அவர். . х .

"கட்டுக்காவல் இல்லாம வாசக்கதவு தொறந்து கிடந்தா அந்தப் பட்டி இந்தப் பட்டி அவரோட மகன் இவரோட மகன்னு இப்பிடித்தான் யாராச்சும் உள்ளாரப் புகுந்துடறாங்க..."

-முத்துராமலிங்கத்துக்குச் சுரீரென்று உறைத்தது. இங்கிதமும், மனிதாபிமானமும், பண்பாடுமில்லாத. முரட்டு அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவரை எதிரே சந்தித்தாம் போலிருந்தது.

எதற்கும் தந்தையின் கடிதத்தைக் கொடுத்துப் பார்க்க லாம் என்று பொறுமை இழந்துவிடாமல் முயன்று பார்க்க

நினைத்தான் அவன்.