நா. பார்த்தசாரதி a I
சட்டைப் பையிலிருந்து கடிதத்தை எடுத்தான். அவரி அதைப் பார்க்காததைப் போல உட்பக்கமாக எழுந்து போய்விட்டார். நாயைக் கட்டிப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணும் உள்ளே போய்விட்டாள். - -
‘நாய் அவன் காதைக் கிழிக்கிற குரலில் கத்திக் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அங்கே நிற்பதா போவதா என்று அவனுக்குப் புரியவில்லை. o எதிரே வந்து நிற்கிற எந்த நாகரிகமான மனிதனையும் பிச்சைக்காரனாகவும், குற்றவாளியாகவும், தன்னைவிடத் தாழ்ந்தவனாகவும் நினைக்கிற அற்ப மனப்பான்மை இந்திய அதிகார வர்க்கத்தின் புராதனமான குணங்களில் ஒன்றாக இன்னும் அப்படியே இருப்பதை அவன் கண்டான். மனம் கொதித்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொள்ள வேண்டி யிருந்தது. - +
சராசரி இந்திய புராக்ரட் என்பவன் இன்னும் ஒரு தனி ஜாதி என்றால் போலீஸ் அதிகாரிகள் அதில் மற்றொரு. தனி ஜாதியாக இருந்தார்கள். எதிரே தென்படுகிற, அனைவரையும் குற்றவாளிகளாகவும். கீழானவர்களாகவும், அற்ப ஜீவிகளாகவும், நினைக்கிற அவர்களது தாமச குணம் சுதந்திரமடைந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகும் போக வில்லை. பொது மக்களின் சேவகர்கள் தாங்கள் என்ற எண்ணம் வராமல் பொதுமக்கள் தங்களுடைய சேவகர்கள் என்ற எண்ணமுள்ள அதிகார வர்க்கம் எந்த நாட்டில் இருக் கிறதோ அந்த நாட்டில் அடிமைத்தனம் நிரந்தரமாகவே கொலு இருந்து கோலோச்சி வாசம் செய்யும் என்று: தோன்றியது. - . . . . . . . . .
மறுபடி சர்க்கிள் முன்பக்கமாக வந்தார். 'சார் இந்த லெட்டரை...' . . . . . . என்று முத்துராமலிங்கம் தான் தொடங்கிய வாக்கி: யத்தை முடிக்காமல் அவர் கவனத்தைக் கவர முயன்று. கொண்டிருக்கையில், வேலைக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு, "ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்-என்று அவர் இரைந்தார்.