பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - - நிசப்த சங்கீதம்

“smiři a sis பழைய நண்பர் ஆண்டிப்பட்டிப் பசுங் :கிளித் தேவர்..."

- 'எனக்கு எந்தத் தேவரையும் தெரியாது. எடத்தைக் காலி பண்ணுப்பா.தெனம் இப்பிடி நூறுபேர் தேடி வராங்க...... உங்களுக்கெல்லாம் வேற வேலையில்லையா என்ன?" - - - - பொறுமை இழப்பதைத் தவிர முத்துராமலிங்கத்துக்கு வேறு வழி இல்லை. .

தன் இனத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற எண்ணத் திலும், பழைய சிநேகிதத்திலும் தந்தை இவருக்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் இவரோ ஒன்றுமே தெரியாதது போல நடித்துக் கடிதத்தையே வாங்க மறுக் கிறார். ஒவ்வோர் இனத்திலும் அடித்தளத்தில் சிரமப் .பட்டுக் கொண்டிருக்கிற வர்க்கத்திலிருந்து உதவிகளும், ..உபகாரத் தொகைகளும் பெற்றுப் படித்துப் பணம் பதவி வசதியான வாழ்க்கை எல்லாம் அடைந்து மேல் தட்டுக்குப் போய்விட்டவன், அதற்குப் பின் அந்த உயர்மான இடத் திலேயே இன்னொரு தனி உயர் ஜாதியாகிவிடுகிறான். அவன் தான் எங்கிருந்து வந்தோமோ அந்த மக்களுடன் தன்னைச் சேர்த்து நினைக்கவே கூசுகிறான். தன்னைப் போல் வசதியும் பதவியுமுள்ளவர்களோடு மட்டுமே அதன் பின் தன்னைச் சேர்த்து நினைக்கப் பழகிக் கொள்கிறான்

என்று புரிந்தது. ।

அந்தஸ்தும் பணமும் பதவிகளுமே இன்றைய புதிய ஜாதிகளைப் பிரிக்கின்றன என்று தோன்றியது. சராசரி இந்தியக் கிராமவாசியின் துரதிருஷ்டங்கள் பல. அவன் தேர்ந்தெடுத்து அனுப்புகிற அரசியல்வாதி தான் மேலே போனதும் அவனுக்குத் துரோகம் செய்கிறான். அவன் உருவாக்கி மேலே அனுப்புகிற உத்தியோக வர்க்கம் மேலே போனதும் அவனைப் புறக்கணிக்கிறது. அவன் உருவாக்கி, அனுப்பிய பண்டங்கள்ை. நகருக்குப் போய்