நா. பார்த்தசாரதி 33
அவனே மீண்டும் வாங்கும்போது அதன் விலை அவனுக்குக எட்டாததாயிருக்கிறது.
முத்துராமலிங்கம் தன் தந்தையின் அந்தக் கடிதத்தை ஒரு தபால்காரன் போட்டுவிட்டு வருவ்தைப்போல அந்த, வீட்டு முகப்பில் வீசிப் போட்டுவிட்டு வெளியேறினான். நகரில் இறங்கியதுமே அதன்மேல் ஏற்பட்ட வெறுப்புஏக்கம்-கசப்பு எல்லாம் இன்னும் அப்படியே தொடர்வது போலிருந்தது. x - . . அந்தப் பெருநகரம் புதிதாக வருகின்ற பாமரனுக்கு அது அளிக்கும் அலட்சியம், தோல்வி-முடிவான ஏக்கம்எல்லாவற்றையும் மீறி அதை அடக்கி வெல்ல வேண்டும். போன்ற துடிப்பு இளைஞனான அவனுக்கு ஏற்பட்டது; எது எது எல்லாம் தன்னை அலட்சியப்படுத்தி ஏங்க வைக் கிறதோ அதை எல்லாம் உடனே முரட்டுத்தனமாக ஜெயித்து அடக்கி வெற்றிக் கொடி நாட்டிவிட வேண்டும். போன்ற இளமைத் துறுதுiறுப்பில் அவன் இருந்தான். ரிக்ஷாவில் தான் வந்த அதே வழியே திரும்பி நடந்தான் அவன். கிழக்கே போய்க் கடற்கரைச் சாலையில் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினான். காவில் அணிந்: திருந்த செருப்புக்களில் ஒன்று நூலிழையில் அறுவதற்குக் காத்திருந்தது. . r r
கடற்கரைச் சாலையில் வரும்போது இருந்ததைவிட இப்போது கலகலப்பு அதிகமாயிருந்தது. வடக்கு நோக்கிக் கார்களும், சைக்கிள்களும் ரிக்ஷாக்களும் அதிக அளவில். விரைந்து கொண்டிருந்தன. -
கால் செருப்புக்களில் ஒன்று இன்னும் சிறிது நேரத்தில் தன்னை கைவிட்டுவிடும் என்ற உணர்ச்சி முத்துராமலிங்கத் திற்கு எரிச்சலூட்டியது.
தலைநகரத்தில் இறங்கிய விநாடியிலிருந்து தனது துரதிர்ஷ்டங்கள் ஒவ்வொன்றாகத் தொடங்குவதுபோல் அவனுக்குத் தோன்றியது. கடிக்கப் படமெடுக்கும் ஒரு