34 நிசப்த சங்கீதம்
பாம்பை அடிக்க விரைவதுபோல் அந்தத் துரதிர்ஷ்டங் கள்ை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்று முனைப்பா
பிருந்தான் அவன். - -
அதிகாலையில் பல் துலக்கிவிட்டு வழக்கமாக மென்று தின்னும் ஒரு கை வேப்பங்கொழுந்தை இன்று இன்னும் சாப்பிட முடியவில்லை. நேற்றுப்பொழுது சாய்கிற நேரத்' துக்கு லாரியில் சென்னைக்குப் பயணம் செய்து வருகிற போது கூட ஒரு சாலையோர வேப்ப மரத்தில் அந்த ஆவலை நிறைவேற்றிக்கொள்ள முடிந்திருந்தது. ஆனால் சுற்றுமுற்றும் எங்கும் கசப்பே நிறைந்திருந்த சென்னை நகரத்தில் அவன் கண்களில் கொழுந்து பறித்து மென்று இன்ன இசைவாக இன்னும் ஒரு வேப்ப மரம் கூடப் படவில்லை. -
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே வேப்ப மரம் தென்பட்டு விட்டது. குயின் மேரீஸ் காலேஜ்-ராணி மேரிக்கல்லூரி-என்று ஆங்கிலத்திலும்தமிழிலுமாக எழுதிப் பெயர்ப் பலகை நிறுத்தியிருந்த ஒரு காம்பவுண்டுச் சுவரின் உட்புறம் வேப்பமரம் ஒன்று தென்பட்டது.
வெளியிலும், உள்ளேயுமாகப் பட்டாம்பூச்சிகள்போல் கும்பல் கும்பலாக மாணவிகள் தென்பட்டார்கள். கல்லூரி தொடங்குகிற நேரம் போலிருக்கிறது. - -
வேப்ப மரத்துக்காக விரைந்தபோது அவனுடைய செருப்பு அறுந்து காலை வாரி விட்டது. இரண்டு செருப்பை யுமே தெரு ஓரமாக வீசி எறிந்துவிட்டு வெறுங்காலோடு நடக்கலாமா அல்லது நன்றாயிருக்கிற மற்றொரு செருப்பை உத்தேசித்து அறுந்து போனதையும் சேர்த்துக் கையிலெடுத் துக்கொண்டு செருப்புத் தைக்கிற ஆளைத் தேடலாமா என்றெண்ணித் தயங்கியமுத்துராமலிங்கம் அடுத்த கணமே அரைகுறையாக உபயோகமிழந்த பண்டத்தை அறவே துர்க்கி எறிகிற பெரு நகர மனப்பான்மைக்குத் தயாராகி யிராத காரணத்தால் மற்றொரு செருப்பையும் சேர்த்துக் கையிலே எடுத்துக்கொண்டு வேப்ப மரத்தை நோக்கி நடந் தான். -