நா.பார்த்தசாரதி 35
2. திடீரென்று ஒரு காரணமுமில்லாமல் அவனருகே கும்ப லாக நின்றிருந்த கல்லூரி மாணவிகளின் கூட்டம் அவனைப் பார்த்துக் கேவியாகச் சிரித்தது.
வீண் பிரமையாக இருக்கும் என்ற எண்ணத்தோடு மேலே நடக்க முயன்றவனை, "ஹீரோ வித் ப்ரோக்கன் சப்பல்ஸ்' என்ற கீச்சுக் குரல் சொற்கள் காதில் விழுந்து தடுத்தன. முத்துராமலிங்கத்துக்கு அந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தனியாக அகப்பட்டுக்கொள்ளும் இளம் பெண்ணிடம் கூட்டமாக வாலாட்டும் ஆண் பிள்ளைகளை அவன் அறி. வான். கூட்டமாக நிற்கும் பெண்களுக்கு நடுவே பெண் களை விட நாணிக்கோணி நெளியும் தனியான ஆண், களையும் அவன் அறிவான். அவன் இரண்டு வகையிலும், சேராதவன். *... . . . . . .
உலகில் பெண்களைக் கண்டு நாணிக் கூசும் ஆண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆண்மைக்குப் பெருமை இல்லை. ஆண்கள் நாணிக் கூசும்படி ஒளிவு மறைவில்லாத, பெண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் பெண். மைக்குப் பெருமை இல்லை. . .
பெண்களைப் பொறுத்தவரை முத்துராமலிங்கம் சங்கோஜியும் இல்லை. வெட்கம் கெட்ட முரடனுமில்லை. அப்படியே கையில் அறுந்த செருப்பை எடுத்துக் கொண்டு நேரே அந்தப் பெண்கள். கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் நடையில் தயக்கமோ பதற்றமோ ஒரு சிறிதுமில்லல. - - . . . . . .
"இதைப் பார்த்து என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது:
இப்படி இன்று எனக்கு நேரலாம். நாளை உங்களுக்கும் நேரலாம். நடுத்தெருவிலே சகமனுஷன் ஒருத்தனுக்குக் கஷ்டம் வந்தா அதைப் பார்த்துச் சிரிக்கிறதுங்கிறது காட்டு மிராண்டித்தனம். ஆர் யூ நாட் அஷேம்டு:'