உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நிசப்த சங்கீதம்

அவர்கள் இதைக் கேட்டு அவனுக்கு மறுமொழி கூறாமல் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாருக்கும் இப்போது சிரிக்க வரவில்லை. அதில் ஒரே ஒரு பெண் மட்டும் சிறிது மெளனத்துக்குப் பின் தயங்கித் தயங்கி மெல்ல ஸாரி...' என்றாள். மற்றவர்கள் இடித்த புளி மாதிரி நின்றார்கள். -

உங்களிலே யாராவது ஒருத்தர் நடுத்தெருவிலே - மானபங்கப்பட்டு நின்னிங்கன்னு வெச்சுக்குங்க. நான் சரியான ஆம்பிளையா இருந்தா அதைப் பார்த்துச் சிரிச்சு. இரசிக்க மாட்டேன். உடனே உங்க மானத்தைக் காப்பாத், தறது எப்படீன்னுதான் முதல்லே யோசிப்பேன்."

அவனது அந்த முகத்திலிருந்த உண்மை ஒளியையும், குரலில் இருந்த தீர்மானத்தையும் பார்த்து அவர்களுக்கு. ஒன்றும் பேச வரவில்லை. சற்று முன் சிரித்த அத்தனைப் பெண்களும் அப்படியே பயந்து கட்டுண்டு நிற்பதுபோல் மிரண்டு நின்றார்கள். -

"சிரிச்சதுக்காக நான் உங்களை மன்னிச்சிடலாம்: நீங்க. என்னிடம் அப்படி மன்னிப்புக் கேட்கலைன்னாலும் நான் உங்களை மன்னிச்சித்தான் ஆவணும். ஆனால் நாகரிகம். உங்களை மன்னிக்காது. போங்க காலேஜ் மணி அடிக்குது... நேரமாச்சு, ' r -

அவர்கள் போய் விட்டார்கள். சென்னை போன்ற, பெருநகரங்களில் புறப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு ரயிலில் அவசரத்தில் அள்ளித் திணித்தாற்போல்தான் மனிதர்களும் குணங்களும், மற்றவையும் நெருக்கடியோடு தாறுமாறாகப் இருந்தன. ஒழுங்கற்ற எதிலும். எதற்கும் எதனாலும் கட்டுப்படாத இந்தப் பெருநகர மனப்பான்மை அவனுக்கு எரிச்சலூட்டியது. ..' . . . . . . . . . . .

ஒருகை வேப்பங்கொழுந்தைப் பறித்து மென்று தின்ற, - போது உணர முடியாத கசப்பைக் குருசாமி சேர்வை வீட்டு அதுவத்திலிருந்து கல்லூரி மாணவிகளின் அநுபவம் வரை

ஒவ்வொன்றாக அவனை உணர வைத்தன.