உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 德丑

எங்கோ தொலை தூரத்தில் இருப்பதாகக் கற்பித்துக் கொண்ட கானல் நீர் போன்ற யாரையோ எதையோ நோக்கித் தமிழ் மக்கள் ஒடிக்கொண்டிருப்பதாக அவனுக் குப்பட்டது. தன்னைப்போல் பல்லாயிரம் மாணவர்கள் கற்பதற்காக என்றோ, போக்குவரத்து வசதிகளில்லாத குக்கிராமங்களுக்கு நடந்தும், கட்டை வண்டியேறியும் அலைந்தும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி வெளியிட்ட அந்தத் தமிழ் மூதறிவாளரைக் கை கூப்பி வணங்கினான் அவன். . . -

சுள்ளென்று வெயில் ஏறிவிட்டதால் பிடரியிலும் காதோரங்களிலும் வேர்வை பெருக்கெடுத்தது. மாபெரும் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய சாமிநாத ஐயரும் அன்றி. லிருந்து தெருவில் நிற்கிறார். தமிழ் படித்து விட்டு வேலை தேடிப் பட்டினம் வந்த தானும் இன்று தெருவில் நிற்கிறோம். சுற்றியுள்ள சுவர்களிலெல்லாம் தமிழ் வாழ்க’ என்று எழுதியிருக்கிறது. வேடிக்கைதான்!" என்று எண்ணி உள்ளுறச் சிரித்துக் கொண்டான் முத்துராமலிங்கம். ... " . . அருகே இருந்த சாலையில் உட்பக்கமாகத் திரும்பி நடந்தான் அவன். அங்கேயே பிள்ாட்பாரத்திலிருந்த ஒரு பெட்டிக் கடைச் செருப்புத் தைப்பவனிடம் ஐம்பது காசு கொடுத்து அறுந்த செருப்பை ரிப்பேர் செய்து கொள்ள, முடிந்தது. எதிர்ப்பட்டவர்கள் பேசிக்கொண்டதிலிருந்தும் சுவர்களே தெரியாமல் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களி விருத்தும் புதிய மந்திரிசபை பதவி ஏற்றுக் கொண்டிருக்கிற

தென்று தெரிந்தது. -

கால் போன திசையில் நடந்து கொண்டிருந்தான். அவன். முன்னோர்களில் இராமநாதபுரம் சேதுபதி ஒருவரின் ஞாபகமாகவும் தந்தைக்குப் பிடித்த அபிமானம் நிறைந்த மாபெருந்தலைவரும், தேசபக்தருமான பசும் பொன் முத்துராமலிங்கத்தேவரின் மேலிருந்த பிரியத் தாலுமே அவனுக்கு முத்துராமலிங்கம் என்று பெயரிட்ட