உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நிசப்த சங்கீதம்

தாகத் தந்தையே அவனிட்ம் பலமுறை சொல்லியிருக்க கிறார்.

தென்னாட்டுச் சிங்கமாகத் திகழ்ந்த தேவரின் நினைவு. வந்ததும் அவனுக்கு உடம்பு புல்லரித்தது. மதுரையில் தேவர் அமரரான தினத்தன்று சிறுவனான தன்னை அழைத்து வந்து குடும்பத்தில் ஒரு பெரியவர் மறைந்தது. போல் பாவித்து உணர்ந்து மொட்டையடித்த தந்தையின் பாசம் மிக்க செயல் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்தத்தீரர் மறைந்த நாளில் அப்படிப் பல்லாயிரம் பேர் மொட்டையிட்டுக் கொண்டு கண்ணிருகுத்த காட்சியை நினைவுக்குக் கொண்டுவர முயன்றான். தேவரையும். காமராஜையும் போல் குடும்ப வாழ்வையே ஏற்காமல் பாடு: பட்ட தலைவர்களை யும், தனக்கு வேண்டிய பல குடும்பங்: களைக் கட்டிக்காக்கவே அரசியலுக்கு வரும் இன்றைய தலைவர்களையும் இணைத்து எண்ணினால் மலைக்கும். மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது,

பெல்ஸ்ரோடில் திரும்பி வாலாஜா சாலை வழியே

மவுண்ட் ரோடில் நுழைந்தபோது ஒரு பெரிய இம்பாலா கார் எதிர்பக்கம் வருவது தெரிந்தது. கார் முகப்பிலும், உள்ளேயும் பிதுங்கும் ரோஜாப்பூ மாலைகள் தெரிந்தன. ஒரமாக நின்ற அந்தக் காரிலிருந்து மங்கையர்க்கரசியின் தந்தை-அன்று மந்திரியாகப் பதவி ஏற்றவர்-கீழே இறங்கி யாரிடமோ பேசினார், மங்கையர்க்கரசியும் இறங்கினாள். உள்ளே அவள் தாய் அமர்ந்திருந்தாற் போலிருந்தது.

பிளாட்பார்த்தில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு. கும்பலில் வேண்டிய யாரோ சிலரிடம் பேசினார் மந்திரி. காரில் கட்சிக்கொடி பறந்து கொண்டிருந்தது. சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடவே, தன்னை அவர்கள் பார்த்து விட முடியாமல், தான் அவர்களைப் பார்க்க முடிகிற மாதிரீ ஓரிடத்தில் நின்று கவனிக்க முத்துராமலிங்கத்துக்கு மிகவும்.

வசதியாயிருந்தது.