பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 蝶品

'தன் தந்தை மூலம் ஏதாவது சிபாரிசு செய்ய வேண்டு மானால் செய்வதாக"-மங்கையர்க்கரசி மதுரையில் சந்தித் திருந்தபோது கூறியிருந்தது நினைவு வந்தது. இப்போதும் கூட அந்த மாதிரிச் சிபாரிசை ஏற்கிற மனநிலையிலே அவன் இல்லை. அது அவனுக்குப் பிடிக்கவும் பிடிக்காது.

மங்கையர்க்கரசியின் தந்தையை அவன் மதிக்கத் தயாராயில்லை. அவர் சந்தர்ப்பவாதியாக அரசியலில் நுழைந்தவர். பிரிட்டிஷ்காரன் இருந்தவரை அவர் ஜஸ்டிஸ் கட்சி. காந்தியடிகளைக் கிண்டல் செய்தவர். சுதந்திரம் , வந்த பின் அவர் காங்கிரஸ். அதற்குப்பின் எந்தெந்தக் கட்சி எப்போது ஆட்சி வசதியைப் பெற்றிருக்கிறதோ அந்தந்தக் கட்சிகளில் அவர் பெரும்புள்ளி. - .

சீட்டாட்ட மே ைஜ யி ல் பணவசதியுள்ளவனே . தொடர்ந்து ஆட முடிந்த மாதிரி அரசியல் சூதாட்டத்தை யும் வகையாக ஆடிக் கொண்டிருந்தார் அவர். எந்தக் கட்சியும் அவரை உள்ளே ஏற்கத் தயங்கவில்லை. பண வசதியுள்ள அயோக்கியனை ஏற்காமலிருக்கவும், பணவசதி யற்ற யோக்கியனை ஏற்கவும் துப்பில்லாத பல அரசியல் கட்சிகளே நாட்டில் நிரம்பியிருந்தன என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. பகல் உணவை ஒரு மலிவுரக ஹோட்டலில் முடித்துக் கொண்டான். . .

அங்கே திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடேசுவரா ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒரு மதுரை நண்பனின் முகவரி பையில் இருந்தது. தேடிச் சென்றான். ஊர் புதிதாகையினால் வழி விசாரித்துக் கொண்டே போக வேண்டியிருந்தது. நண்பனின் அறை பூட்டியிருந்தது. நண்பன் ஊரில் இல்லையா அல்லது வெளியே போயிருக் கிறானா என்கிற விவரமும் தெரியவில்லை. எங்கே போய் யாரைப் பார்ப்பது என்று உடனடியாகத் தோன்றவில்லை. இருட்டுகிறவரை காத்திருந்ததுதான் மிச்சம். நண்பன் வர வில்லை. கலையரசி குமாரி கண்மணி தங்கியிருக்கப் போவ தாகக் கூறிய லாட்ஜின் பெயர் நினைவிருந்தாலும் அங்கே