உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நிசப்த சங்கீதம்.

LApafಹಣಿ! சாகும் இடமான மயானத்தில் அவர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருப்பதை அவன் புரிந்துகொள்ள முடிந்தது. -

இலேசாக மழை தூறத் தொடங்கவே அங்கிருந்த ஒரு. பாழ் மண்டபத்தில் அவன் உட்கார வேண்டியதாயிற்று. யாரோ ஒருவருக்குச் சமாதி மண்டபமாகக் கட்டப்பட்டு இன்று பாழடைந்திருந்த அந்தப் பழைய கட்டிடத்தில் நாலைந்து பேர் நன்னயாமல் உட்காரப் போதுமான இடமிருந்தது. . *

மிக அருகில் பிணங்கள் எரிந்துகொண்டிருந்ததைப் பற்றிய பிரக்ஞையோ பாதிப்போ இல்லாமல் மனிதர்கள் கள்ளச் சாராயத்துக்கும், கஞ்சாவுக்குமாக சகஜமாய் அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வோர் இந்திய நகரத்திலும் அண்டர்வோர்ல்ட். எனப்படும் கீழ் உலகம் ஒன்று இப்படி இயங்கி வந்தது. இந்தக் கீழ் உலகத்தின் உதவியும், அடியாள் வலிமையும், பண பலமும், அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தேவைப் பட்டன. அரசியலால் கிடைக்கிற சில இலகுவான லாபங். களும், பாதுகாப்பும் இந்தக் "கீழ் உலகத்துக்கும் அவ்வப்.

போது தேவையாயிருந்தன.

அப்போது மழை பெரிதாக வந்துவிட்டால், மேலே: கூடாரமில்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் முற்றாக எரிய முடியாமல் போய்விடுமே என்கிற, கவலையோடு மயானத்தின் வாட்ச்மேனும் அவனுடைய உதவியாளனும் தங்களுக்குள் அதுபற்றிப் பேசிக்கொண் டார்கள். - -

செத்த பிறகும் சில நாழிகை நேரத்துக்கு மழையும், வெயிலும் மனித உடலைப் பாதிப்பதைப்பற்றி நினைத்த போது வேடிக்கையாகத்தான் இருந்தது முத்துராம லிங்கத்துக்கு. , . . . . * , -