lo 2 நிசப்த சங்கீதம்
பல்கலைக் கழகங்களைத் திறக்க ஏற்பாடு செய்து கொண் டிருக்கிறார்கள், -
தவறுகளைக் களைய நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் தவறுகளையே நியாயங்களாக்கிவிட முயற்சிகள் நடக். கின்றன. அநியாயங்களை ஒழிக்க முயல்வதற்குப் பதில் நியாயங்களையே ஒழிக்க முயற்சிகள் நடந்து கொண்டி ருந்தன. உண்மை களைப் புரியவைக்க முயலுவதற்கும். பதில் பொய்களைப் புரிய விடாமல் குழப்பி வைக்கவே முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. பொய்களே உண்மை. கள் போலப் பேசப்பட்டன.
இவர்களையும் இவற்றையும் எதிர் நீச்சலிட்டாவது: ஒரு கை பார்க்க வேண்டுமென்று இளைஞனாகிய அவன் மனமும் கைகளும் துறுதுறுத்தன. தன் ஒருவனுக்கே. ஆயிரம்-லட்சம்-கோடிக்கணக்கான கைகள் முளைத்து. இவற்றையும் இவர்களையும் எதிர்த்துப் போரிட வேண்டு: மெனத் துடித்தான் அவன். . -
அவனையும் மீறி உணர்ச்சி வசத்தில் வாய் குரல். கொடுத்துவிட்டது:-"பேசிப் பேசியே இப்படி ஊரை. ஏமாத்தறாங்க......' ... -- . - * ...
டேய்! யார்ர்ராவன்......ஒதையுங்கடா சொல். றேன்.....' - r
இரண்டு மூன்று பேர் முத்துராமலிங்கத்தை நோக் அவன்மேல் வெறியோடு பாய்ந்தார்கள்,
அறிவுக் கலப்பற்ற காரணகாரியச் சிந்தனையற்ற அந்த வறட்டு முரட்டுத்தனம் முத்துராமலிங்கத்திற்குக் குமட் டினாலும் தற்காப்புக்குத் தயாரானான் அவன். இம். மாதிரி வேளைகளில் வார்த்தைகளும் காரணகாரிய வாக்கு. வாதங்களும் மட்டுமே உதவி விடுவது இல்லை.
முத்துராமலிங்கம் சுதாரிப்பதற்குள் - அவனுடைய வலது முழங்கையில் பிளேடுக் கீறல் ஒன்று விழுந்து செங்
கீற்றாய் குருதிக்கோடாகிக் கொப்புளித்தது.