உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 55

அவனைத் தன் மனிதனாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அவனுடைய தந்தைக்கு வேண்டியவரான விலாசம் தேடிப் போய் அவன் சந்தித்த போலீஸ் உயர் அதிகாரி அப்படி அவனை ஏற்கவோ, முகமலர்ச்சியோடு வரவேற். கவோ தயாராயில்லை. புறக்கணித்துவிட்டார். x

இந்த முரண்பாடு அப்போது அவன் மனத்தில் தோன்றியது. படித்தவர்கள், பெரிய பதவியிலுள்ளவர் களின் அநாகரிகமும், அநாகரிகமானவர்கள் என்று ஒதுக்கப் படுகிறவர்களின் படிப்பும் பண்பும் இடம் மாறியிருப்பதை' அவன் உணர்ந்தான். படிப்பு, பணம், பதவி இவை' மூன்றும் சிலர்ைப் பொறுத்தவரை மனிதாபிமானமற்ற வறட்டுத்தனத்தையும், கோழைத்தனத்தையும்தான் அவர் களிடம் வளர்த்திருக்கின்றனவோ என்றே அவனுக்குத் தோன்றியது. x x . . .

முத்துராமலிங்கம் தன்னோடு கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டிலிருந்து வந்திருந்த குழுவுக்கு விடை கொடுத்து. அனுப்பி விட்டு அப்படியே ஊரிலிருந்து வந்திருந்த லாரிக்குப் போகத்தான் விரும்பினான். ஆனால் உடனிருந்த -சாராயம் அவனை எச்சரித்தான்.

"நீ இங்கே தனியா இருக்கப்பிடாதுப்பா உங்கிட்டே குத்து வாங்கிக்கிட்டுப் போனானே அரை பிளேடு, அவன்

போய்த் தன்னோட கூட்டாளிங்களை இஸ்துக்கினு மறுபடி. உன்னைத் தேடிக்கிட்டு இங்கே வம்புக்கு வருவான்...'

"வந்தா வரட்டுமே! செம்மையாகக் குடுத்து அனுப்பி வைக்கிறேன்..." -

"அவனுக சும்மா வரமாட்டாங்கப்பா ... சைக்கிள் செயின் இரும்புக் குழாய், கொம்பு, கடப்பாறைன்னு ஆப்ட்டதைத் தூக்கிக்கிட்டு கும்பலா ஆள் சேர்த்துகிட்டு ஒதைக்க வருவாங்க...' . . . . . -

"உடம்பிலே வலு இல்லாதவங்கதான் ஆயுதங்களை தம்பணும். எனக்கு உடம்பிலே வலு இருக்கு ஒத்தைக்கு