பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நிசப்த சங்கீதம்

ஒத்தை வந்தா எப்படிப்பட்ட கொம்பனையும் புரட்டி முதுகுக்கு மண் காட்டி அனுப்புவேன்.' -

பிசிறு தட்டிாத-சிறிதும் வழவழப்பு:இல்லாத-நம்பிக்கை நிறைந்த அந்தத் தெற்கத்திச் சீமை உறுதியைக் கண்டு அடி தடிகளிலேயே பழகி வளர்ந்த சாராயத்துக்கே வியப்பாய். இருந்தது. தந்திரமாக வயிற்றிலடிக்கிறவர்கள். வஞ்சக மாகத் தாக்குகிறவர்கள். ஏய்த்துப் பிழைப்பதாலேயே தங்களைத் திறமைசாலிகளாகக் காட்டிக் கொள்கிறவர்கள் பிறருடைய பேதமையை ஏணியாகப் பயன்படுத்தித். தங்களை மேதைகளாக் உயர்த்திக் கொள்கிறவர்கள் என்று. இப்படி ரகங்களையே பட்டினத்தில் பார்த்துப் பார்த்து மரத்துப்போயிருந்த சாராயம்சின்னிக்கு அசல் மானம், அசல் மரியாதை-அசல் ரோஷம்-அசல் வலிமையோடு கூடிய ஒரு தெற்கத்திச் சீமைக்காரனை எதிரே சந்தித்தபோது ஒரு. உயர்ந்த மனிதனைச் சந்தித்துப்பேசிக்கொண்டிருக்கிறோம். என்கிற பெருமை உணர்ச்சிதான் ஏற்பட்டது.

"அண்ணே. எப்படியோ நாம சந்திச்சு ஒருத்தருக். கொருத்தர் பழகிப்பிட்டோம். இப்ப தயவு பண்ணி நீதான் சொல்கிறபடி கேக்கணும். வெள்ளை சொள்ளையாகச். சட்டைபோட்ட படிச்ச ஆளுங்கள்ளே உன்னை மாதிரி ஒரு. தீரனை நான் இதுங்காட்டியும் கண்டுக்கிட்டதே இல்லே. இன்னிக்கு ராத்திரி நீ நம்ப விருந்தாளியா இருக்கணும்.'

விருந்தாளியா இருக்கிற அளவு நான் அத்தனை பெரிய மனுஷன் இல்லை." - - . . . . . . . . எனக்கு நீ தான் பெரிய மனுஷன் அப்பா! உன்னைப் ப்ோல் நான் யோக்கியன் இல்லே. எதை எதையோ பேஜார் புடிச்சதையெல்லாம் பண்ணி எப்படி எப்படியோ பிழைக் கிறவன். அதுனாலேயே எனக்கு உன்னைக் கண்டால்: பயமாகவும், மரியாதையாகவும் இருக்குதுப்பா'

சாராயச் சின்னியின் இந்த நெகிழ்ச்சியையும், ! மரியாதையையும் முத்துராமலிங்கம் சிறிதும் எதிர்பார்க்க