உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 57

வில்லை. பாசத்தோடு அவன் தோளில் தட்டிக்கொடுத்தபடி "சின்னி நான் பெரிய மனுஷன் இல்லே. ஆனா யோக்கியன். வேலை தேடிப் பட்டினத்துக்கு வந்திருக்கிற ஒரு கிராமாந்தரத்து மத்தியதர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ரயில்லியோ, பஸ்ஸிலியோ வரப் பண வசதி பத்தாம லாரி ஏறி இங்கே வந்திருக்கிறவன்; என்னை நீ மதிச்சுக் கூப்பிடறே. அதுக்காக நான் வரேன்."ரொம்ப சந்தோசம்.ண்ணே: - உங்க ஊர்லே அண்ணே,ன்னு கூப்பிடறது கூட எனக்குப் பிடிக்கலே. இங்கே அந்த வார்த்தைக்கு "டெப்ரஸியேஷன் வேல்யூ'தான் மீதமிருக்கு. தேய்மானம். இல்லாமே எந்த நல்ல வார்த்தையும் இங்கே தப்பிப் பிழைக்காது போல்ருக்கு. -* -- - - - - -3

'அட! நீயொண்ணு...ஆளுங்களோட ஒழுங்கு நாணயம்லாமே கொஞ்சம் கொஞ்சமாத் தேஞ்சி போற. அளர்ல வார்த்தைங்க மட்டும் தப்பிப் பிழைச்சுருமா, என்ன? அதெல்லாம் போகட்டும்...இப்ப நீ நம்பகூட வா... சொல்றேன்...சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்ச நேரம்

குவியாப் போதைக் கழிக்கலாம்.'

-முத்துராமலிங்கத்தால் அவனைத் தட் டிக் கழிக்க முடியவில்லை. -- .

தின்னோடிருந்த மற்றவர்கள் எல்லாரையும் அனுப்பி விட்டு முத்துராமலிங்கத்தை மட்டும் அழைத்துக்கொண்டு பைகிராப்ட்ஸ் சாலையிலிருந்த ஒரு மதுரை முனியாண்டி

விலாஸுக்குள் நுழைந்தான் சின்னி. . . .

"'உங்க ஊர்க்காரங்க கடையாவே பார்த்து இட்டாந் திருக்கேன்! உனக்குப் பிடிக்குமில்லே...' . . .

முந்துராமலிங்கம் புன்முறுவல் பூத்தான். 'தண்ணி போடற பழக்கம் உண்டா?' - -

'இன்னிக்கு வரை இல்லே. :- • 'சரி! வாணாம்...அந்தப் பேச்சை வுட்டுடு.'