உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

உள்ளடக்க வறுமை (Powerty of ideas) அல்லது சித்தாந்த மலட்டுத்தனம் ஏற்படுகிறது. - -

இந்தச் சித்தாந்த வறுமையின் காரணமாக ஓர் இளைஞ. னும், புவதியும் சுந்துப்புற உலகத்தைப்பற்றிய கவலையோ அக்கறையோ இன்றிப் பூங்காக்களிலும், கடற்கரை களிலும் சந்தித்துச் செளந்தரிய அவஸ்தைகளைப் பற்றி துணிநாக்கால் உர்ையாடிக் கொள்ளும் பூஞ்சையான வெற்றுப் பொலிவுக் க ைத க ைள .ே ய திட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. - - ஒரு வளமான மொழிக்கு இதைவிடப் பெரிய பஞ்சம் வேறு எதுவும் இருக்க முடியாது. - - -

கதாபாத்திரங்கள் வெறும் செலுாலாய்ட் பொம்மை களாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் நான். ஆனால் தமிழில் அதன் வலுவற்ற திரை உலகப் பிரதிபலிப் பாக இலக்கிய உலகின் கதாபாத்திரங்களும் செலூலாய்ட். படைப்புக்களாக மாறி வருகிறார்கள். . - இந் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஆற்றோடு

அடித்துக் கொண்டு போகப்படும் சத்தில்லாத சோனி மனிதர்கள் இல்லை. இவர்கள் எதிர் நீச்சலிடும் சக்தி படைத்தவர்கள். எதிர் நீச்சலிடுகிறார்கள். இவர்களுடைய எதிர் நீச்சலே இந்த நாவல், - “. . . . . .

வெறும் ஒய்வு நேர நொறுக்குத்தீனியாக அல்லாமல் வாசகர்களுக்கு வைட்டமின் சத்து நிறைந்த விருந்தாக இதைப் படைப்பதில் பெருமைப்படுகிறேன். -

முன்பு கதிரில் தொடர் நாவலாக வெளிவந்த இக் கதை, இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக நூல் வடிவில் வருகிறது." -

கருத்துப் பஞ்சமில்லாத இலக்கியங்களைத் தேடி ங்கிர்ந்து மகிழும் ஆரோக்கியமான வாசகர் கூட்டத்துக்கு இதை உரின்மயாக்குவதில் மகிழ்கிறேன். . . .

சென்னை - - - - * + . ..", 31–12–81 s ந1. பார்த்தசாரதி