உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி #9

"இந்தப் பேட்டையிலே வெள்ளிக்கடை வச்சிருக்காருi பெரிய புள்ளி.' - - -

இப்படிப் பெரிய புள்ளிகளின் அந்தரங்க ஆசைகளை யும், சபலங்களையும், தாபங்களையும் தீர்க்கும் முயற்சி யிலேயே பல அப்பாவிகள் பட்டினத்தில் சிறிய புள்ளிகளாக இருக்க நேரிடுகிறது என்று புரிந்தது அவனுக்கு. பல கீழ் மட்டத்து மனிதர்கள் மேல்மட்டத்து அயோக்கியர்களின் தேவையையும் அவசியத்தையும் உத்தேசித்தே கீழ்மட்டத்து வேல்ைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் பார்க்கப் போனால் இந்தக் கீழ்மட்டத்து மனிதர்கன் கர்மயோகி’களைப் போலக் கெட்டவர்களாக இயங்கி வந்தார்கள். அவர்கள்மேல் படிந்திருக்கும் துருவையும், களிம்பையும் நீக்கிப் பார்த்தால் உள்ளுரத் தங்கமாக இருந்தார்கள். தாங்கள் கெட்ட காரியங்களைத் தான் செய்துகொண்டிருக்கிறோம் என்பதைக்கூட உணராத, அளவு நல்லவர்களாகத் தோன்றினார்கள்.

சாப் பாடு முடிந்ததும் முத்துராமலிங்கத்துக்கு ஸ்பெஷல் மசாலா பீடா வாங்கிக் கொடுத்தான் சின்னி. " அப்புறம், லாரியிலே வந்தேன்னு சொன்னேனில்லே.., உன்னைச் சுகமாத் துரங்கப் பண்றேன்...வா-என்று சைக்கிள் ரிக்ஷாவில் அவன்ை அருகே உட்கார்த்தி அழைத்துச் சென்றான் சின்னி. -

எங்கோ இருளடைந்த சந்து பொந்துகளைக் கடந்து ரிக் ஷா சென்றது. சில தெருமுனைகளில் ஒரே ஒரு விளக்கு மட்டும் இருந்தது. பல இடங்களில் மின் விளக்குக் கம்பங்கள் இருந்தன. விளக்கு எரியவில்லை. -

கடைசியில் வாயிற்புறம் தடித்த முரட்டு ஆள் காவல் நின்றுகொண்டிருந்த, இரண்டு மூன்று நாய்கள் ஒரே சமயத்தில் குரைத்த முன் பகுதியும், தோட்டமும் இருளடைந்திருந்த ஒரு மாடி வீட்டின் முன்போய் ரிச்ஷா நின்றது. முதலில் சின்னி இறங்கியதும் கேட்டில் நின்றி ஆள் மரியாதையோடு அவனுக்குச் சலாம் வைத்தான்.