பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 61

கலை, கலாச்சாரம், சாஸ்திரம், சங்கீதம், சாராயம், கதாகாலட்சேபம், அரசியல். பெண்கள் என்று பேதாபேத் மின்றிச் சகலத்தையும் ரேட்"டுப் போட்டு விற்கும்.குரூர் மான நகரங்களின் வியாபார மனப்பான்மையை அவன் வெறுத்தான். அதைப் பார்த்து அவனுக்கு அருவருப்பாகக் கூட இருந்தது. . . . . . . . . . இறைவனின் பாதங்களில் அர்ச்சிக்கப்பட வேண்டிய மலர்கள் அசந்தர்ப்பம் காரணமாகச் சாக்கடையில் கவிழ்ந் தது போல் நடுவழியில் கவிழ்ந்துவிட்ட அந்தப் பெண் களைக் கருணையோடு பார்த்தான் அவன்.

"சின்னி! இந்தத் தங்கச்சிகளை எல்லாம் முதல்லே . உள்ளாரப்போகச் சொல்லு'. - "ஏம்ப்பா?...உன் செலக்சன்'...... * 'முதல்லே உள்ளாரப் போகச் சொல்லு'... கட்டளையிடுவது போல் திட்டவட்டமாகவும்.தீர்மான மாகவும் இருந்த அந்தக் குரலை மறுக்க முடியாமல் அந்தப் பெண்களை உள்ளே போகுமாறு சமிக்ஞை செய்தான் சின்னி. அவர்கள் போனதும் சின்னியின் பக்கம் திரும்பி, 'இதெல்லாம் என்ன? " என்று ஆத்திரத்தோடு கேட்டான் முத்துராமலிங்கம். . . . .

"அதான் அப்பவே சொன்னேனே, நம்பர் ஒன், நம்பர் டுன்னு ரெண்டு பிஸினஸ் நம்ப கைலே இருக்குதுன்னு!.. நம்பர் "ஒன் கிருஷ்ணாம்பேட்டையிலே நடக்குது. இந்த நம்பர் டு'வுக்கு ஸிடிலே இது மாதிரி நாலஞ்சு பிராஞ்சுங்க. இருக்குது." .

பட்டினத்தில் எல்லாத்தையுமே விற்கிறீங்கப்பா' "ஆமா! எதெது காசு பணந்தருதோ அதை எல்லாம் இங்கே விக்கிறோம்'...... ... - . . . . . . .

அந்த நகரம் என்கிற கலாசாரமயானத்தில்-நாகரிகக் கழிவறையில் எதற்கும், எவருக்கும். எந்த வகையிலாவது ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு.