62 - - நிசப்த சங்கீதம்
சின்னி தன் மேலும் அவசர அவசரமாக ஒரு முத்திரையைக் குத்தித் தனது பெறுமானத்தையும் விலையையும் நிர்ண யித்துவிட முயல்வது கூட அவனுக்குப் புரிந்தது.
பட்டினத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்படுவது போலவே ஒவ்வொரு விலைக்கும் ஒரு மனிதன் நிர்ணயிக்கப்படுகிறான். விலை நிர்ணயிக்கப்படு வதற்குத்தான் உத்யோகம், வாய்ப்பு, தகுதி என்றெல்லாம். ஏதேதோ பல வேறு பெயர்களைச் சொல்கிறார்கள்.
அந்த மாளிகையின் சுவர்கள் எல்லாமே உப்புப் பரிந்து ஈரம் கசிந்திருப்பதைக் கண்டான் முத்துராமலிங்கம். அபலைகளும், இளம் பெண்களும், அந்த இடத்தில் படும் துயரங்களைக் கண்டு அந்தச் சுவர்கள் கூட நீண்ட நாட்க களாகக் கண்ணிர் வடித்திருந்தனவோ, என்னவோ?
"சின்னி இப்படிப் பிழைக்க உனக்கு வெட்கம், மானம், ரோஷம், கூச்சம் எதுவுமே இல்லையா?” -
வேணாம் வாத்தியாரே! இந்த மாதிரிப் பேச்செல் லாம் இங்கே வச்சுப் பேசினா வந்து போற வாடிக்கைக் காரங்க சங்கடப்படுவாங்க... நாம வேணா மொட்டை மாடியிலே போய்ப் பேசுவோம்'... -
'சின்னியோடு அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குப் போனான் முத்துராமலிங்கம். சின்னியே பேச் சைத் தொடர்ந்தான். - -
- 'வெக்கம், மானம், ரோஷம், கூச்சம் ஒதுவுமே இல்லை யான்னுதான்னே கேட்டே......?' -
"ஆமாம்.....ஏன்? அப்படிக் கேட்கவே கூடாதோ?'
'நல்ல ரேட்டுக் கெடச்சா இதையெல்லாம் கூட வித்துடறதுதான். இங்கத்தையப் பளக்கம்! இதையெல் லாம் வித்து நான் குடுத்திருக்கிற டொனேஷன் ல தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயிச்சிருக்காரு. இதை யெல்லாம் வித்து நான் குடுக்கிற லஞ்சத்திலே எத்தினி ஜனம் பொழைக்குது தெரியுமா?'...... . . . . --