உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நிசப்த சங்கீதம்

"இன்னொருத்தனை வாழவைக்கிறத்துக்காக எந்தப் பைத்தியக்காரனும் ஆட்சிக்கி வர்ரதில்லே......தான் வாழ ஹதுக்காகவும் வளர்ரதுக்காகவும்தான் ஆட்சி, பதவி எல்லாம்னு உனக்குத் தெரியாதா?’’ -

இப்படிக் கேட்டுவிட்டுச் சின்னி உரத்த குரலில் இடி இடியென்று முரட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவனோடு சிறிது நேர்ம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த மொட்டை மாடி யிலேயே மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்காகக் போடப் பட்டிருந்த ஒர் ஒட்டடுக்குத் தாழ்வாரத்தில் படுத்துத் துரங்கிவிட்டான் முத்துராமலிங்கம். சின்னி விடிகாலையில் அவனைச் சந்திப்பதரகக் கூறி விட்டுப் படியிறங்கிக் கீழே சென்றான். முத்துராமலிங்கத்தின்மேல் மரியாதையும். பாசமும் சுரக்கும் மன நிலையில் இருந்த சின்னி வேலை விஷயமாக அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற கனிவுடன் போனான். -

ஒரே நிமிஷத்தில் இரவு தீர்ந்து போய் விடிந்து விட்ட தைப் போல் பொழுது புலர்ந்திருந்தது. சின்னி வந்து எழுப்புவதற்குள் முத்துராமலிங்கமே ஆற்றிலுமிருந்த மரங் களிலே பறவைகளின் குரலொலிகள கேட்டு எழுந்திருந்து உட்கார்ந்த்ான். முந்திய இரவு தனக்கு இருந்த அசதியின் காரணமாகத்தான் இரவே விரைவில், முடிந்து விட்டதாகத்

தோன்றுகிறது என்று அவனுக்குப் புரிந்தது.

அந்த மொட்டை மாடியின் சுற்றுப்புறத்தில் இயற்கை எழில் கொஞ்சியது. மாமரங்களும் தென்னைமரங்களுமாக ஒரே பசுமை. அந்தப் பசுமையை ஊடுருவிக் கொண்டு தென்னை ஒலைகளிடையே பரவிய கதிரொளிக் கற்றைகள்

வைர ஊசிகளாய் மின்னின.

சின்னி இரண்டு கைகளிலும் ஆவி பறக்கிற சூட்டோடு .டீ கிளாஸ்களை எடுத்து வந்தான். அவன் டீ கிளாஸா களுடன் படியேறி வரவும் மாடி விளிம்புச் சுவரருகே வந்து உரசிக் கொண்டிருந்த ஒரு வேப்பமரத்திலிருந்து முத்துராம