பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 6莎

லிங்கம் கொழுந்துகள் பறிக்கத் தொடங்கவும் சரியா யிருந்தது. - - -

"எனக்கு இப்ப டீ வேணாம்ப்பா! நீயே ரெண்டு கிளா ஸையும் குடி!" -

"அப்பிடியா சங்கதி? இப்பல்லே புரியுது காரணம்: வேப்பங்கொழுந்து துன்னு துன்னு ரம்பை மாதிரிப் பொம் பளைங்க எதிரே வந்து நின்னாக்கூடச் சாமியாருங்க மாதிரி மடிசஞ்சி ஆசாமி ஆயிப் போயிட்டேப்பா...நீ.'

சாமியாராப் போறதுக்கு வேப்பங்கொழுந்து தின்னா மட்டும் போறும்னு யாருப்பா உனக்குச் சொன்னது?' - *

யாருப்பா சொல்லனும்? எங்க ஆயாவே சொல் லும்ப்பா...அது இப்ப இல்லே. செத்துப்பூடுச்சி. வேப்பங் கொழுந்து துண்றவன் குடும்ப வாழ்க்கை நடத்த முடியா துங்கும்... நாட்டு வைத்தியத்தில் படா கில்லாடிப்பா அது." . -

"எங்க ஊர்லே பொன்னம்பலத் தேவர்னு ஒருத்தரு. இதே கொழுந்தை அம்மியாலே அரைச்சு உருட்டி உருட்டித் திம்பாரு. சும்மா உடம்பு வைரம் பாஞ்ச தேக்குக்கட்டை மாதிரி மினுமினுக்கும். அவருக்கு மொத்தம் ஒம்பது குழந்தைங்க. நாலு பிள்ளைகள். அஞ்சு பெண்கள்." போறுமா?"

சின்னி மறுத்துப் பதில் சொல்லாமல் தேநீரை ரசித்துப் பருகலானான். முத்துராமலிங்கத்தைக் கீழே குழாயடிக்கு அழைத்துச் சென்றான். கலியாணச் சத்திரங்களில் இருப்பது: போல் பின்பக்கம் ஒரு கூடத்தில் வரிசையாக நாலைந்து துருப்பிடித்த குழாய்கள், குளியலறைகள் எல்லாம் அங்கே இருந்தன. ‘. . .

ஒரு மூலையில் முந்திய இரவு அவன் பார்த்த பெண் களில் சிலர் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டிருந்தார்கள்,